பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் | Visual Story

சி. அர்ச்சுணன்

``தமிழ்நாடா? திராவிட நாடா? என்று கேட்பவர்களுக்குச் சொல்வேன், ஓரணாவில் காலணா தமிழ்நாடு என்று!"

``ஒரு ஜனநாயகச் சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பா இருக்கக்கூடாது!"

``விடுதலைபெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், உணர்ச்சிபெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்!”

``கட்டுப்பாடும் ஒழுங்கும் நமக்குக் கட்டாயம் தேவை, இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்!”

``சாதியை நாம் எதிர்க்கிறோமென்றால், சமதர்மத்துக்கான சூழலை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்!”

``சாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள், உலகம் எவ்வழியில் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்!”

``எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்!”

``நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்குப் போடப்படுகின்ற தடை கற்கள்!”

``விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு!”

``பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோரின் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.”