"100 கோடி தடுப்பூசிகள் புதிய இந்தியாவின் அடையாளம்!"- பிரதமர் மோடி உரையின் டாப் 10 அம்சங்கள்

அகஸ்டஸ்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16 அன்று போடப்பட்டது. ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகள் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளோம். இந்தச் சாதனையைக் கொண்டாடி பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் டாப் 10 அம்சங்கள்.

பிரதமர் மோடி

1. கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா படைத்த இந்தச் சாதனையின் பின்னால் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர். இது அவர்களின் வெற்றி.

PM Narendra Modi

2. இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது வெறும் புள்ளிவிவரம் அல்ல. இது புதிய இந்தியாவின் அடையாளம்.

கொரோனா தடுப்பூசி | JOEL RODRIGUES | Wikimedia Commons

3. நம்மால் முடியுமா? இதற்கான வசதி இந்தியாவில் இருக்கிறதா? கொரோனா தொற்றை முறியடிக்கும் வேகத்தில் நாம் தடுப்பூசி போடுவோமா? இந்த எல்லா கேள்விகளுக்கும் இந்தத் தருணம் விடை தந்துவிட்டது.

மெகா தடுப்பூசி முகாம் | Photo: Vikatan/ தே.தீட்ஷித்

4. நாம் எல்லோரும் இணைந்து போராடினால், கொரோனா வைரஸை விரைவில் முறியடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

5. வளர்ந்த நாடுகளில்கூட தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் தயக்கம் இருக்கிறது. இந்தியாவில் அப்படிப்பட்ட பிரச்னை இல்லை என்பதை இந்த சாதனை நிரூபித்துள்ளது.

Corona Vaccine | Claudio Furlan/LaPresse via AP

6. உலகத்துக்கே மருந்து மற்றும் தடுப்பூசி கொடுக்கும் திறனுள்ள நாடாக இந்தியா இருக்கிறது என்பதை இந்தத் தடுப்பூசி சாதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.

Vaccine Manufacturing

7. முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பது போன்ற வி.ஐ.பி கலாசாரம் இல்லாமல், எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி செலுத்துதல்

8. இந்திய மருந்து நிறுவனங்கள் நமக்குள் நம்பிக்கை விதைத்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு புது முதலீடுகள் வருகின்றன. நம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

Vaccine Manufacturing

9. தடுப்பூசி போலவே எல்லாவற்றிலும் இந்தியத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்தத் தீபாவளியை மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடுவோம்.

Modi

10. கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கியமான கவசம்தான். ஆனாலும், வெளியில் செல்லும்போது மறக்காமல் காலணி அணிவது போல, தவறாமல் முகக்கவசமும் அணிவோம்.

Modi Mask | -