``உலக வரைபடத்துல இலங்கை காணாமப் போயிடும்..!'' - பொது மேடைகளில் விஜய்யின் அரசியல் பஞ்ச்கள்! #HBDVijay

வருண்.நா

2011 - தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம், நாகை.

``தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் இவ்வளவு கொடுமைப்படுத்திய பிறகும் மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இலங்கை ராணுவத்துக்கு பயப்படறவங்க இல்ல நாங்க... உலக வரைபடத்துல இலங்கைங்கிற நாடே காணாமப் போயிடும்!''

விஜய்

2013 - ஈழப் போருக்கு எதிராக தமிழ் சினிமா உண்ணாவிரதக் கூட்டம்.

``என் ரசிகர்கள், `ஈழத்தில் போர் நிறுத்தம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்; அங்கே தமிழ் மக்கள் காக்கப்பட வேண்டும்' என்று எழுதி பிரதமருக்குத் தந்தி அனுப்புங்கள். என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழின உணர்வுள்ள அத்தனை பேரும் இதைச் செய்யுங்கள். ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்.''

விஜய்

2014 - `ஜில்லா’ 100-வது நாள் விழா.

``என் படங்கள் நல்லா வரணும்னு என்னைவிட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்கிற என் ரசிகர்கள் என்கூட இருக்குற வரைக்கும்...'' என்று சொல்லி விஜய் சிறிது நேரம் இடைவெளிவிட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ``சரி அத விடுங்க'' என்று சொல்லி முடித்துக்கொண்டார் விஜய்!

விஜய்

2014 - `கத்தி' இசை வெளியீட்டு விழா.

``என்னை நான் தியாகினு சொல்லிக்க மாட்டேன்... அதேநேரத்துல சத்தியமா நான் துரோகியும் கிடையாது. இது தமிழ்நாடு... நான் தமிழன்!''

விஜய்

2017 - ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு வீடியோவில்...

``உலகம் முழுக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்டது, மக்களுடைய கலாசாரத்தையும் உரிமையும் பாதுகாக்கத்தான். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பா கைதுசெய்யப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்`பீட்டா' நான் சந்தோஷப்படுவேன்; இவ்வளவுக்குக் காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்`பீட்டா' தமிழ்நாடு சந்தோஷப்படும்.''

விஜய்

2017 - விருது விழா ஒன்றில்...

``இந்தியா வல்லரசா மாறணும் அப்படிங்கிறதெல்லாம் அப்பறம்தான்... முதலில், விவசாயிகளுக்கு நல் அரசா மாறணும்.''

விஜய்

2017 - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா.

``என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கலாம்னு, இந்த `மெர்சல்’ படத்துல சில வசனங்கள் பேசுனேன். இதுக்கெல்லாம் நீங்க கொடுத்த ஆதரவு, எனக்கு ஒருபடி மேல தைரியத்தையும் பொறுப்பையும் கொடுத்துருக்கு!''

விஜய்

2018 - `சர்கார்' இசை வெளியீட்டு விழா

``ஒரு மாநிலத்தில் மேல் மட்டத்தில் இருக்குறவங்க ஒழுங்கா இருக்கணும். ஒரு தலைவன் நல்லா இருந்தா, ஆட்டோமெட்டிக்கா கட்சி நல்லா இருக்கும். புழுக்கம் ஏற்பட்டா மழை வர்ற மாதிரி... நெருக்கடி ஏற்பட்டா ஒரு நல்ல தலைவன் வருவான். அவனுக்கு கீழ அமையும் பாருங்க ஒரு சர்க்கார்!''

விஜய்

2019 - `பிகில்' இசை வெளியீட்டு விழா

``யார் யாரா எங்கவெக்கணுமோ அவங்களை அங்க அங்க உட்காரவெச்சா. எல்லாம் சரியா நடக்கும்.''

விஜய்