சு.உ.சவ்பாக்யதா
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்துக் கடவுளான காளி தேவியை, இழிவுபடுத்தும் விதமாக புகைப்படம் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது இந்திய ட்விட்டர் பயனர்களிடம் பெரும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த நிலையில், இந்தப் பதிவு உடனடியாக அகற்றப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) மே 22 அன்று, பசிபிக் தலைவர்களுடனான சந்திப்பு நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில், கொலோசியர்களின் விவிலிய (biblical book) புத்தகத்திலிருந்து, ரிஷி சுனக் சில பத்திகளை வாசிப்பார் என்று கேன்டர்பரி பேராயரின் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
சர்வதேசப் பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில், தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நாட்டின் தொழில்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய இரானின் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்தது.
பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைதுசெய்யப்பட்ட ஆண்ட்ரூ டேட், தற்போது பல நிறுவனங்கள், பெண்ணியவாதிகள், LGBTQ சமூகத்தினர் அவரை அமைதிப்படுத்த முயல்வதாக மீண்டும் ட்வீட் செய்திருக்கிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி "என்னுடைய நாட்டுக்கும், மக்களுக்கும் பிரான்ஸ் அளித்த உதவிக்காக என்றும் நன்றியுணர்வோடு இருப்பேன்" என்று தெரிவித்தார்.
சிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷியை, துருக்கி உளவுப் படையினர் கொன்றதாகத் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் (Tayyip Erdoğan) தெரிவித்திருக்கிறார்.
அயர்லாந்தில் புதிய உரிமையாளருக்கு விற்பனை செய்யப்பட்ட கூப்பர் என்ற நாய், அதன் பழைய உரிமையாளரைத் தேடி 40 மைல் பயணித்திருக்கிறது. பழைய உரிமையாளரின் வீட்டை நோக்கி சுமார் 27 நாள்கள் நடந்தே சென்றிருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தாய்லாந்து பிரதமர் வேட்பாளர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டின்போது, மே 6 அன்று மூன்றாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு ஆடைகளை ராணி கமிலா அணிந்துகொள்வார். மேலும், பக்கிங்ஹாம் அரண்மனை முடிசூட்டு ஆடைகளின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது.