இங்கிலாந்துக்குச் செல்லும் ஜோ பைடன் | புற்றுநோயிலிருந்து குணமடைந்துவரும் நடிகர் - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருக்கும் தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) "ஜனநாயகமே அச்சுறுத்தலில் இருக்கிறது'' எனக் கூறியிருக்கிறார்.

Ringo H.W. Chiu

ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய காவல்துறை நடத்திய சோதனைக்கு அரபு லீக் என்ற பிராந்திய அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Hershey, Nestle, Unilever ஆகிய நிறுவனங்களுக்குக் கொக்கோ விநியோகம் செய்துவரும் Barry Callebaut நிறுவனம் அதன் புதிய சிஇஓ-வை நியமித்தது. Peter Feld என்பவரை சிஇஓ-வாக நியமித்தப் பிறகு இந்த நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதம் சரிந்தது.

இங்கிலாந்து சார்ந்த ஆன்லைன் புத்தகக் கடையான 'புக் டெபாசிட்டரி' (Book Depository) யை அதன் தாய் நிறுவனமான அமேசான் ஏப்ரல் 26 அன்று மூடவிருக்கிறது.

Michael Sohn

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிரான வழக்கில், ஆபாச நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் தோல்வியடைந்தார். இதற்காக அவர் 1,22,000 அமெரிக்க டாலரை அபராதமாகச் செலுத்தவிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் 11 முதல் 14 வரை இங்கிலாந்து, அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

Patrick Semansky

சமீபத்தில் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், அவரின் இறுதி உரையை நாடாளுமன்றத்தில் நிறைவுசெய்தார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பால்டிமோர் கத்தோலிக் பேராலயத்துடன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் 600-ஐ கடந்திருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 1940-லிருந்து 158 போதகர்கள்மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

Kim Hairston

ஆஸ்திரேலிய நடிகரான ஹக் ஜேக்மேன் (Hugh Jackman) அவரின் தோல் புற்றுநோயிலிருந்து குணமடைந்து வருவதாக அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார்.