க.ஶ்ரீநிதி
எல் நினோ வானிலை பாதிப்பால், ஆசியாவில் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், உலகின் அதிக வெப்பமான ஆண்டாக 2023 இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர்.
ட்விட்டர் நிறுவனம், நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாத கணக்குகளை ரத்துசெய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இதனால் பல கணக்குகளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இணையதள வசதி, டிஜிட்டல் நிர்வாகத்தில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பிடித்திருக்கிறது. பாகிஸ்தானில் 15 சதவிகித மக்களுக்கு இணையதள வசதி, தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்காமல் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
முடிசூட்டு விழா முடிவடைந்த பின்பு, சார்லஸ் மன்னரின் முதல் அதிகாரபூர்வ புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது. ஹூகோ பர்னார்ட் என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
நியூஜெர்சியிலிருந்து, அட்லாண்டாவுக்குச் சென்ற ஃப்ரான்டியர் விமானத்தில், பெண் பயணி ஒருவர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்ததால், அவரை விமானத்திலிருந்து வெளியேற்ற, சகபயணிகள் கையை உயர்த்தி வாக்களிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது.
`வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’, `தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’, `நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகள், பத்திரிகைத்துறையின் உயரிய விருதான `புலிட்சர்' விருதை வென்றிருக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போர், ஃபெடரல் ஏஜென்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
பிரபல சமூக வலைதள நிறுவனமான லிங்க்ட்இன், 700 பணிகளைக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும், சீனாவுடனான இன்கெரியர்ஸ் செயலியின் பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஜெர்மனியின் நாஜி படைகள் தோற்கடிக்கப்பட்டதுபோலவே, உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கடிக்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் தொடர்பான வழக்கில் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஜப்பான் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்யும் ஒரு மாம்பழத்தின் விலை, இந்திய மதிப்பில் 19,000 ரூபாயாம். இதுவே உலகில் அதிக விலைக்கு விற்க்கப்படும் மாம்பழம் என்கிறார்கள்.