ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ? | ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

60 ஆண்டுகளுக்கு மேல் பிரேசிலின் ராக் இசை அரசியாக வலம் வந்த ரீடா லீ, தனது 75-வது வயதில் காலமானார். 2010-ல் மேடைக் கச்சேரிகளில் பங்கேற்பதை நிறுத்திய இவர், 2021-ல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தில் தரைப்பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்தனர்.

குரங்கம்மை என அறியப்பட்ட எம்பாக்ஸ், `உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது’ என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. நோய் பரவல் தொடங்கி ஒரு வருட காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ட்விட்டரின் புதிய சிஇஓ விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும், அவர், 6 வார காலங்களில் நியமிக்கப்படுவார் எனப் பெயர் குறிப்பிடாமல் எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், புதிய சிஇஓ லின்டா யக்காரினோ (Linda Yaccarino) என்பவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் சில ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்துவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கியிருக்கிறது. போட்டிகளை நடத்தவில்லையென்றால், கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் என அறிவித்திருக்கிறது.

கலிஃபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நில அதிர்வு!

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கைத்துப்பாக்கிகளை வாங்குவதற்கு உரிமை உள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

வீடியோ வியூஸுக்காக விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ட்ரெவர் ஜேக்கப்புக்கு (Trevor Jacob) 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், இரண்டு வாரம் ஜாமீன் வழங்கியது.

K.M. Chaudary