10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம் | பீஜிங்: மருத்துவமனையில் தீ விபத்து - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

சீனாவின் பீஜிங்கில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, சுமார் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 71 நோயாளிகள் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்.

பத்து முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அயர்லாந்தைச் சேர்ந்த நோயல் ஹன்னா (Noel Hanna) என்பவர் மேற்கு நேபாளில் அமைந்திருக்கும் அன்னபூர்ணா சிகரத்திலிருந்து இறங்கும்போது உயிரிழந்தார்.

புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான பிடிஎஸ்-ன் ஜே ஹோப் (J-Hope of BTS), அந்த நாட்டின் கட்டாய ராணுவ சேவையைத் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Lee Jin-man

2018-ம் ஆண்டில் மோசமான உணவுப் பழக்கங்களால் உலகளவில் சுமார் 14.1 மில்லியனுக்கும் அதிகமானோர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேச்சர் மெடிசன் என்ற ஜர்னல் (Journal Nature Medicine) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Faisal bin Farhan சிரியாவுக்குப் பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2011-க்குப் பிறகு சிரியாவுடனான முதல் நேரடி பேச்சுவார்த்தை இதுவே.

சுமார் 34 மில்லியன் மக்கள் ஆப்கானிஸ்தானில் வறுமையில் இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

John Minchillo

உக்ரைனில் அமைந்திருக்கும் கெர்சன் நகரை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். அங்கிருந்த ராணுவ வீரர்களிடம் போர்நிலை குறித்தும் அவர் விசாரித்தார். கெர்சனை உக்ரைன் ஆக்கிரமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச்சின் (Evan Gershkovich) பெயில் கோரிக்கை மாஸ்கோ நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய தீவில் கடந்த ஆறு நாள்களாக உணவு, தண்ணீரின்றி சிக்கித் தவித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர். கடுமையான இல்சா புயலின் காரணமாக அந்தத் தீவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையே நடந்துவரும் மோதலில், அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்தார்.