ட்விட்டரில் 2 மணி நேர வீடியோ பதியும் வசதி | நியூ கேலடோனியா தீவில் சுனாமி எச்சரிக்கை- உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

ஊழியர்கள் OpenAI-ன் ChatGPT-ஐ பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர்.

K.M. Chaudary

ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களால், இரண்டு மணி நேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவிடும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

மியான்மரில், மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் `ஆபரேஷன் கருணா' என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று கப்பல்களில் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பிவைத்திருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்... ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யாவின் 30 ஏவுகணைகளில் 29-ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது

LIBKOS

British Telecom and Television நிறுவனம் 2030-க்குள் 55,000 பணிகளைக் குறைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது. செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே பசுபிக் கடலிலுள்ள நியூ கேலடோனியா தீவில் (New Caledonia Island) 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

இடுப்பில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக, பிரென்ச் ஓப்பன் போட்டியிலிருந்து விலகுவதாக டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அறிவித்திருக்கிறார்.

FRANCISCO UBILLA

வடகிழக்கு இத்தாலியில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தால்‌, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்திருக்கிறது.

Luca Bruno