அமெரிக்காவின் பிரபல நடிகர் மரணம் |ட்விட்டருக்குப் போட்டியாகக் களமிறங்கும் மெட்டா - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

ட்விட்டருக்குப் போட்டியாக, அதைப்போலவே ஒரு செயலியை வெளியிட மெட்டா திட்டமிட்டிருக்கிறது. இந்தச் செயலி, ஜூன் முதல் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இங்கிலாந்து அரசர் சார்லஸ், அரசி கமிலா ஆகியோர் லண்டனிலுள்ள பிரபல பஞ்சாபி உணவகத்துக்குச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த பஞ்சாப் உணவை மிகவும் விரும்பி வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

@punjabcoventgarden

இங்கிலாந்து, `African Plume' எனப்படும் வெப்ப அலையால் இந்த ஆண்டு பெரிதாக பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. சஹாரா பாலைவனத்திலிருந்து வரும் வெப்ப அலையால், ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

`ஜி7' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

மியான்மரில், மோச்சா புயலால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. எட்டு லட்சம் மக்கள், உணவு, மருத்துவ உதவி இல்லாமல் தவித்துவருகின்றனர். இதுவரை இந்தப் புயலால் 145 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இரானில், மாசா அமினி என்ற பெண்ணின் மரணத்துக்குப் பிறகு நடந்த போராட்டத்தில்,‌ நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர், நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான ஜிம் ப்ரௌன் (Jim Brown) காலமானார். அவருக்கு வயது 87.

Lennox McLendon

செர்பியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் பெல்கிரேடில் பேரணி நடத்தினர். இந்த மாதத்தில் மட்டும் துப்பாக்கிச்சூட்டினால் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Darko Vojinovic

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நேரடி விமான சேவையை மறுசீரமைக்க விளாடிமிர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து ஜியார்ஜியாவுக்கு வணிக விமான சேவை தொடங்கப்பட்டது.

பாரிஸ் நகரிலுள்ள பிரபல அருங்காட்சியகமான Pompidou Centre, பராமரிப்புப் பணிக்காக ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாக மூடப்படுகிறது.