சு.உ.சவ்பாக்யதா
கயானாவில் ஒரு பள்ளியில் நடந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 19 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்க செனட்டிலுள்ள ஒரே கறுப்பினக் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிம் ஸ்காட். இவர் 2024 -ம் ஆண்டு வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இஸ்ரேல் ராணுவம் பெரிய அளவிலான சோதனையின் (Raid) போது மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றது. வெஸ்ட் பேங்க்கிலுள்ள அகதிகள் முகாமில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்கா - பப்புவா நியூ கினியா நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்ஆன்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.
ஜி7 மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க முடியவில்லை என்று பிரேசில் அதிபர் லூலா தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்றிருக்கும் பிரதமர் மோடி, சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்த நிகழ்வில், ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகரில், 'லிட்டில் இந்தியா' என்ற நுழைவாயில் அமைப்பதற்கான அடிக்கல் சின்னத்தைத் திறந்துவைத்தார்.
ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜீன் கரோல். இதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தார். இந்த நிலையில், அவர் தற்போது நஷ்ட ஈடாக 10 மில்லியன் டாலர் கோரியிருக்கிறார்.
அமெரிக்காவில் வாத்துகள் சாலையைக் கடக்க உதவிய இளைஞர் ஒருவர் கார் மோதி பலியானார்.