க.ஶ்ரீநிதி
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறதுக. இந்த நிலையில், அங்கு சிக்கியிருக்கும் எகிப்தியர்களை வெளியேற்றுவதற்காகத் தூதரகத்திற்கு காரில் சென்ற எகிப்திய அதிகாரி கொல்லப்பட்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள், சந்திரனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இளவரசர் ஹாரி தன்னுடைய தந்தையின் முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்துக்கு 10 வரிசைகள் பின்னால் அமர்ந்திருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துகளைத் தடுக்க, 25 வயதிற்குட்பட்ட புதிய ஓட்டுநர்கள், 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை எந்த இளம் பயணிகளையும் வாகனத்தில் ஏற்றிச் செல்ல தடைவிதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
வடமேற்கு பாக்கிஸ்தான் பகுதியில் காவல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
கென்யாவில் பட்டினி கிடந்து இயேசுவை வழிபடும் வினோத வழிபாட்டு முறையினால், உயிரிழந்த 73 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து நேபாளத்துக்கு 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், இஞ்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் துபாயில் தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில், பாலஸ்தீனியர் ஒருவர் மக்கள் கூட்டத்துக்கு நடுவே காரை செலுத்தியதில், ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த விபத்தினால் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த கனடாவின் பிரபல எழுத்தாளர் தாரிக் ஃபடா, புற்றுநோயால் உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவர் மகள் நடாஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.