சு.உ.சவ்பாக்யதா
ஜப்பானைச் சேர்ந்த ஐ ஸ்பேஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது, தோல்வியில் முடிந்ததாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனாலும், அதிக அளவில் தரவுகள் கிடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பேச்சுவார்த்தை சரியாக இல்லாத நிலையில், இந்த வாரம் டெல்லியில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் (SCO) , சீனப் பாதுகாப்புதுறை அமைச்சர் லி ஷங்ஃபு (Li Shangfu) கலந்துகொள்ளவிருக்கிறார்.
பிரிட்டிஷ் புகையிலை நிறுவனம் சட்டவிரோதமாக வடகொரியாவுக்குச் சில பொருள்களை விற்பனை செய்ததாக சுமார் 600 மில்லியன் டாலர் அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வடகொரியாவுடனான பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையை மீறியதாக, அமெரிக்க நீதித்துறை அந்த நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது.
2021-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, ஐஎஸ் தீவிரவாதியால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னால் செயல்பட்டவரைக் கொன்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியாவின் கூட்டு அமைப்பான குவாட் மாநாட்டின் (QUAD) சந்திப்பை ஆஸ்திரேலியா மே 24 அன்று முதன்முறையாகத் தொகுத்து வழங்குகிறது. இதை அந்த நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்திருக்கிறார்.
உக்ரைனில் கார்கிவ் பகுதியிலுள்ள அருங்காட்சியகத்தில், ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலின்போது அந்தக் கட்டடம் சிதைக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பட்ஜெட் பற்றாக்குறைகளைக் கையாள, 40 மில்லியன் பாட்கள் (Baht) மதிப்பிலான அரசாங்கச் சேமிப்பு பத்திரங்களை விற்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பென்-ஸ்டேட் யுனிவர்சிட்டியின் தலைவரான இந்திய -அமெரிக்கரான நீலி பெண்டாபுடி, அமெரிக்கக் குடியேற்ற கவுன்சிலின் 2023- ம் ஆண்டுக்கான புலம்பெயர்ந்தோர் சாதனை விருதைப் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) நாடாளுமன்ற வளாகத்துக்குள் பூர்வீக வகையான தோடரா மரத்தை நட்டார். மேலும், இதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் 1,00,000 பூர்வீக வகையான மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2024-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் இரண்டாம் முறையாகப் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.