க.ஶ்ரீநிதி
``இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தின் ஆங்லோ-பிரெஞ்ச் எண்ணெய் நிறுவனமான பரென்கோவுக்குச் சொந்தமான 200 பேரல் எண்ணெய் பூல் துறைமுகத்திலுள்ள நீரில் கசிந்திருக்கிறது.
அரசர் மூன்றாம் சார்லஸ், முன்பு பயன்படுத்திய டிஸ்கவரி 3 மாடல் லான்ட் ரோவர் கார் ஏலம் விடப்பட்ட நிலையில், அந்த கார் 12,050 பவுண்டுகளுக்கு (12 லட்சம்) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
`வாரத்தில் மூன்று நாள்கள்கூட பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்’ என ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் Zoe Schiffer தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஊழியர்களின் வருகைப் பதிவு கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
டொனால்டு ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பரிசுகள் முறையாகக் கையாளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், சால்வடோரின் பிரதமரால் பரிசளிக்கப்பட்ட அவரின் ஆள் உயர ஓவியம், அவருக்குச் சொந்தமான ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2,000-க்கும் மேற்பட்ட பதப்படுத்தி வைக்கப்பட்ட செம்மறி ஆடுகளின் தலைகள் எகிப்திலுள்ள ஒரு கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவை காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இந்த மாதத்தில் நடைபெறும் இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமானமும், நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் மோதிக்கொள்ளுமாறு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த மூன்று ஊழியர்கள் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மூன்று ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
யுனைடட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொலைத்த பயணியின் ஏர் பாட்ஸ், விமான ஊழியரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நிறுவனம் 271 டாலர்களும், 5,000 மைல்கள் பயணம் செய்யும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.
மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடக தளங்களுக்கு மாணவர்களை அடிமையாக்கி, அவர்களை மன நெருக்கடிக்கு ஆளாக்குவதாகக் அந்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.