தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த அமெரிக்க மாகாணம் | பாகிஸ்தானில் பரவும் குரங்கு அம்மை - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

நீண்ட தூரம் தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகளை, 2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.

Aaron Favila

சீன அதிபர் ஜி ஜின் பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் குரங்கு அம்மை நோயால் முதல் நபர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் விசாரித்துவருகின்றனர்.

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் தேசியக்குழு பைடனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

ஜோ பைடன்

அமெரிக்காவிலிருந்து பல அணுசக்தி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முதன்முறையாக தென்கொரியாவுக்கு அனுப்பப்படுகிறது. வடகொரியாவின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Sean D. Elliot

முதன்முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் (Bishops Meeting) பெண்களும் வாக்களிக்க, போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியிருக்கிறார். பெண்களுக்கு அதிக அளவில் முடிவெடுக்கும் பொறுப்புகள் அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜீன் கோரல், ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார்.

Bebeto Matthews

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னகொட, அவரின் மனைவி ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளிப் பண்டிகையன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி