க.ஶ்ரீநிதி
சுல்தான் அல் நெயாடி (Sultan Al-Neyadi) என்ற விண்வெளி வீரர், `ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் விண்வெளியில் நடந்த (Spacewalk) முதல் வீரர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும் H-1B விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க வடிவமைக்கப்பட்டிருக்கும், கணினிமயமாக்கப்பட்ட முறையில் மோசடி முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஃபெடரல் ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
உலகின் மோசமான கடன் சுமையில் இருக்கும் 15 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், இதிலிருந்து உடனடியாக மீண்டுவர வேண்டும் என பொருளாதார நிபுணர் அதீக் உர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
மத்திய உக்ரைனின் குடியிருப்புப் பகுதிமீது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க இலங்கை அரசுக்குச் சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கியிருக்கும், மூன்று மில்லியன் டாலரைப் பெற்றுக்கொள்ள இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையான `ஆபரேஷன் காவேரி' மூலம் குஜராத்தைச் சேர்ந்த 56 பேர் மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் அகமதாபாத் வந்தடைந்தனர்.
ரஷ்யாவின் 21 ஏவுகணைகள், இரண்டு டிரோன்களை வான்வழித் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் மிச்சிகனில், பள்ளிப் பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநர் ஒருவர், திடீரென சுயநினைவை இழந்திருக்கிறார். இந்த நிலையில், பேருந்திலிருந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர், பேருந்தை இயக்கி சக மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
அலாஸ்காவில் பயிற்சிப் பணியிலிருந்து திரும்பிய இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானத்தின் மீது மோதியதில், மூன்று அமெரிக்க விமானிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.