க.ஶ்ரீநிதி
பாகிஸ்தானில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட சிறுமிகள், பெண்களின் கல்லறைகளுக்கு உறவினர்கள் பூட்டுப் போட்டு வருகின்றனர். நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில், உயிரிழந்த தங்கள் மகள்களின் உடல்களைப் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகளை பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, ட்விட்டர் பணியாளர்களுக்கு 140 நாள்களாக இருந்த பெற்றோர் விடுப்பு (Parental Leave) தற்போது 14 நாள்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது தொழிலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆபத்தான டிக் டாக் சவாலைச் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் 75% தீக்காயங்களுடன் உயிர்தப்பியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தினம் தன்னுடைய 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இங்கிலாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ராஜ் சிங், தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸில், வீட்டுக்கு வெளியில் சத்தமாகத் துப்பாக்கியால் சுடுவது தூக்கத்தை பாதிப்பதாக அண்டை வீட்டார் கூறியதால், கோபத்தில் அவர்கள் ஐந்து பேரை ஃப்ரான்சைஸ்கோ ஒரோபேசா என்பவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர், மூன்று சிறுவர்கள் தன் வீட்டு காலிங் பெல்லை அடித்துத் தொடர்ந்து விளையாடி வந்ததால், ஆத்திரமடைந்து அவர்களை தன்னுடைய காரில் துரத்தினார். அப்போது ஓடிய சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் அவரைக் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.
நார்வேயில் மக்களிடம் நெருங்கிப் பழகிய ஃப்ரெயா என்ற வால்ரஸ், பாதுகாப்பு காரணமாகச் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த நிலையில், அதற்குக் கடற்கரையில் வெண்கலச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
ஹாரிபாட்டர் உட்படப் பல படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகரான ஆலன் ரிக்மேனை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கூகுள்-டூடுலை வெளியிட்டிருக்கிறது.
ரஷ்யாவின் கிரீமின் போர்ட்டிலுள்ள எண்ணெய் கிடங்கில் டிரோன் மோதியதால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.