`ரகிட ரகிட ரகிட ஊ..!’ - மன்சூர் அலிகானின் மிரட்டலான பத்து பதில்கள்!

ராகேஷ் பெ

``கொரோனா பெயரைச் சொல்லி இன்னைக்கு நாட்டையே `பிக் பாஸ்’ ஷோ ஆக்கிட்டாங்க.’’

``கடந்த 10 வருடங்களாக நாங்கள் முப்பாட்டன் முருகனைக் கொண்டாடிவருகிறோம்.'’

``கட்சித் தலைவர் சீமான் சொன்னால், எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவேன்.’’

``கமல்ஹாசன் ஐயா எனக்கு மூத்த நடிகர். தமிழக அரசை அவரு பாராட்டினால் பாராட்டிட்டுப் போகட்டும். அதுக்காக நானும் பாராட்டணுமா?’’

``இனத்தின் எதிரி, இந்தச் சமுதாயத்தின் எதிரி என்று சீமான் சொல்வதுதான் எங்களுக்குக் கொள்கை.’’

``மக்கள்கிட்ட வாயை மூடி, முகக்கவசம் போடச் சொன்னதே போராட்டம் பண்ணாம இருக்கத்தான்.’’

``இந்திக்காரனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு, நம்ம கையில் வேலைக் கொடுத்து யாத்திரை போகச் சொல்றாங்க பா.ஜ.க-காரங்க.’

``திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லிக்கிட்டு, அவங்களை முன்னேத்திக்கிட்டாங்க.’’

``குனிஞ்சு குப்புறப் படுத்துக்கிடப்பவர்களெல்லாம் தமிழர்கள் அல்ல.’’

`` `வூட்டுல கெட, படுத்துக் கெட, கம்முனு கெட’னு மக்கள்கிட்ட சொல்லிட்டு, அரசியல்வாதிங்க மட்டும் அவனவன் வெளியே போயி ஆட்டையப்போட்டுக்கிட்டிருக்கான்.’’