க.ஶ்ரீநிதி
பெரு நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டங்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, 18 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் போர் ஆயுதங்களைத் தயாரிக்கும் என அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) தெரிவித்திருக்கிறார்.
கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்ட ரஞ் பிள்ளை, கனடாவின் யூகோன் மாகாணத்தின் பிரீமியராகத் தேர்வாகியிருக்கிறார்.
ஜப்பானில் ஏவியன் பறவைக்காய்ச்சல் நோய் பரவல் காரணமாக இதுவரை 10 மில்லியன் பறவைகள், விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன.
வியட்நாமில் லூனார் புது வருடப்பிறப்பைக் கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர். `டெட் திருவிழா’ என அழைக்கப்படும் இந்த விழாவுக்காக அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேபாளத்தில் பிரசாந்தா தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருக்கிறது.
ஹைத்தி நாட்டில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. 2019-ல் தேர்தல் நடக்காத நிலையில், தற்போது பொறுப்பில் இருந்தவர்களின் பதவிக்காலமும் முடிந்ததால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உதவிய உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நன்றி தெரிவித்திருக்கிறார்.
எகிப்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் தவித்துவருகின்றனர்.