க.ஶ்ரீநிதி
கௌதமாலா (Guatemala) நாட்டில், ஃபீகோ என்ற சக்தி வாய்ந்த எரிமலை வெடித்தது. எரிமலையிருந்து நெருப்புக்குழம்பும், சாம்பலும் வெளியேறுவதால், அதன் அருகேயுள்ள லா அரோரா பன்னாட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
நாசாவின் ஓரியான் ஸ்பேஸ் கேப்சியூல் (Orion Space Capsule) தனது 25 நாள்கள் பயணத்தை நிறைவுசெய்து பத்திரமாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்தது.
கால்பந்து உலகக் கோப்பை ஆட்டத்திலிருந்து போர்ச்சுக்கல் அணி வெளியேறியது குறித்து கால்பந்து வீரர் ரொனால்டோ வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் தாலிபன்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
பெரு நாட்டில் புதிய பிரதமர் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தக் கோரி போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் கெமி பெடெனோச் தன் வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக முதல் சந்திப்பாக இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்.
உக்ரைனில் நடந்த போரில் ரஷ்ய ராணுவத்துக்காகப் போரிட்டு உயிரிழந்த 23 வயது ஜாம்பியா நாட்டு மாணவனின் உடல் நாடு திரும்பியது.
இரானில் மாசா அமினி கொல்லப்பட்டதற்காக நடந்துவரும் போராட்டத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, மேலும் பலருக்கு விதிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
1988-ம் ஆண்டு அமெரிக்காவின் பான் அமெரிக்கா விமானம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில், லிபியா நாட்டின் அபு அகிலா முகமது மசூத் என்பவரின் சிறைத் தண்டனையை அமெரிக்கா உறுதி செய்தது.
ஜி7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு மேலும் உதவி செய்வது குறித்து இன்று ஆலோசிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.