சு.உ.சவ்பாக்யதா
காம்பியா நாட்டின் துணை அதிபரான பதாரா அலியூ ஜூஃப் (Badara Alieu Joof) காலமானார். இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவை (Maria Ressa) வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் தெற்கு ஆசியாவிலேயே வலுவிழந்த பொருளாதாரமாக இருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது.
கிழக்கு இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் ஹேராத் மாகாணத்தில் கார்பன் மோனாக்சைடு விஷக்கசிவால் சுமார் 140 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சீனாவின் Zhao Xintong உட்பட 10 ஸ்னூக்கர் வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றனர்.
ஒரே பாலின திருமணத்தை சர்ச் ஆஃப் இங்கிலாந்து அனுமதிக்க மறுப்பதாக அந்த தேவாலயத்தின் பிஷப்புகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 77-வது கூட்டத்தொடரின் தலைவரான கசாபா கொரோசி (Csaba Korosi) இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வந்து மூத்த அதிகாரிகளைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் (Jacinda Ardern) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டாலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.