நியூசிலாந்தில் 41-வது பிரதமர் பதவியேற்பு | சிகாகோவில் கொல்லப்பட்ட இந்தியர் - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் லக்சர் நகரத்தில் 1,800 ஆண்டுகள் பழைமையான சாமான்ய குடியிருப்பு நகரம் ஒன்றைக் கண்டறிந்திருக்கின்றனர்.

பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ கூட்டணியில் சேரத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

Pontus Lundahl/TT

எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி (Abdel Fattah El-Sisi) குடியரசு தின அணிவகுப்பில் விருந்தினராகப் பங்கேற்க இன்று இந்தியா வந்தடைந்தார்.

வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் சுவாச நோய்கள் அதிகரித்துவருவதால், ஐந்து நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞரான ஜஸ்டின் பீபர் (Justin Bieber) தன்னுடைய இசை உரிமைகளை 200 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானிடம் கூறியிருக்கிறார்.

Mindaugas Kulbis

சிகாகோவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 23 வயது இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான ஈடுபாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்தின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

Mark Mitchell

லண்டன் அதிக அளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்த நகரத்தின் மேயர் சாதிக் கான் (Sadiq khan) மக்களை கவனமாக இருக்கும்படி எச்சரித்திருக்கிறார்.