இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை|காசாவில் வான்வழித் தாக்குதல் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

க.ஶ்ரீநிதி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி உள்ளிட்டோர் பங்குபெறும் வாஷிங்டன் விழாவில், திரைப்படப் பிரபலங்கள் ஜார்ஜ் க்ளூனி, கிளாடிஸ் நைட் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

Greg Allen

மார்வல் திரைப்படமான `பிளாக் பான்தர்: வகாண்டா ஃபாரெவர்' திரைப்படம் தொடர்ந்து நான்காவது வாரமாக வட அமெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

ஜாம்பியா நாட்டில், கரிபா அணையில் நீர் இருப்புக் குறைந்திருப்பதால், நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அந்த நாட்டில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

முதன்முறையாக, இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்சோக், பஹ்ரைன் அரசர் ஹமத் பின் ஐசா அல் கலீஃபா, இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா ஆகியோரை பஹ்ரைனில் சந்தித்தார். இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது.

பெரு நாட்டின் தெற்கு ஆண்டெஸ் பகுதியில் நிலவிவரும் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குடிநீர் இல்லாமலும்‌, போதிய உணவு இல்லாமலும் மக்கள் தவித்துவருகின்றனர்.

இஸ்ரேல், காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆக்கிரமிப்பு செய்திருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடந்துவரும் தாக்குதலில் இதுவரை 10 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Abed Rahim Khatib

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியிலுள்ள செமேரு எரிமலை வெடித்ததால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Imanuel Yoga

மூன்று மாத காலமாக மருத்துவ விடுப்பிலிருந்த மாலி பிரதமர் சோகுல் மைகா தற்போது மீண்டும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.

தென் கொரியாவில், குறைந்த ஊதியத்தை எதிர்த்து ட்ரக் (Truck) ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.