பாலியல் குற்றவாளிக்கு 129 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் | நேபாளத்தில் நிலநடுக்கம்

க.ஶ்ரீநிதி

ரஷ்ய ராணுவம் அதன் படைகளை உக்ரைனின் கெர்சோன் நகரிலிருந்து வெளியேற உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்.

Olexandr Chornyi

ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் தனது 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.

Nick Wass

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு, ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிய சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

Godofredo A. Vásquez

பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள், குரு நானக்கின் 553-வது பிறந்தநாள் விழாவை மிக விமர்சையாக கொண்டாடினர்.

பிலிப்பைன்ஸில் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபருக்கு 129 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் நான்கு பில்லியின் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கச் செலவு செய்ததை மீட்கும் முயற்சியில் எலான் மஸ்க் இறங்கியிருப்பதாகத் தகவல்.

Evan Agostini

ஆஸ்திரேலியாவின் மருத்துவக் காப்பீடு நிறுவனமான மெடிபாங்கின் தரவுகளை ஹேக்கர்கள் ஹேக் செய்திருக்கின்றனர். பயனாளிகளின் தகவல்களை டார்க் வெப் தளத்தில் வெளியிடத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Rick Rycroft

நேப்பாலை தாக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.6-ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் 2,300 ஆண்டுகள் பழமையான ரோமானிய வெங்கலச் சிலை கண்டெடுப்பு.