பாகிஸ்தான் கராச்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்| பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்- உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

துருக்கி, சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45,000-ஐ கடந்து சென்றிருக்கிறது.

Hussein Malla

யார்க்‌ஷயரில் ஸ்கார்பரோ நகருக்கு அருகிலுள்ள பர்னிஸ்டன் விரிகுடாவில் ஒரு டைனோசரின் தடம் ஒன்று கண்டறியப்பட்டது. 3.3 அடி அளவிலிருந்த இந்த தடம், ரொட்டுன்டா அறிவாலயத்தில் வைக்கப்படவிருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள போலீஸ் தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 13 ஆண்டுகளாக மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்ட இங்கிலாந்தின் பெர்லின் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. டேவிட் பாலன்டைன் ஸ்மித் என்ற 51 வயது நபர் ரஷ்யத் தூதரகத்துக்கு முக்கியத் தகவல்களை அனுப்பிவந்தார்.

Metropolitan Police

இந்த வாரம் நிகரகுவா நாட்டில் நாடுகடத்தப்பட்ட 94 எதிர்ப்பாளர்களின் குடியுரிமையை ரத்துசெய்த அந்த நாட்டின் முடிவு, சர்வதேசச் சட்டத்துக்கு முரணானது என்று ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Lynne Sladky

பல்கேரியாவில் தனியாக நின்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாகக்கிடந்தனர். இதில் சந்தேகத்துக்கு உள்ளான நான்கு பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

STR

ஹாலிவுட் நடிகை ஸ்டெல்லா ஸ்டீவன்ஸ் (Stella Stevens) தன் 84-வது வயதில் உயிரிழந்தார். இவர் `Girls! Girls! Girls!’ , `The Poseidon Adventure’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்த மாதம் இந்தியாவில் நிகழவிருக்கும் ரெய்ஸினா பேச்சுவார்த்தைகளின் விளம்பர காணொளி ஒன்றில் இரான் போராட்டங்களின் படம் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் 'ரெய்ஸினா' மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க எழுத்தாளர் ஆன் கௌல்டர் (Ann Coulter) அதிபர் வேட்பாளரான இந்திய வம்சாவளி நிக்கி ஹேலியை 'உன் நாட்டுக்கே திரும்பிச் செல்' என்று கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. `தி மார்க் சிமோன் ஷோ’ நிகழ்ச்சியில் இத்தகைய இனவெறி சார்ந்த கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடம் தொடங்கி 48 நாள்கள்தான் ஆகிறது. அதற்குள் 73 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஏராளமானோர் இறந்துள்ளனர். `` 'போதும்' பிரார்த்தனைகள் மட்டும் போதாது. இத்தோடு நிறுத்திக்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’’ என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார்.

Matt Rourke