சு.உ.சவ்பாக்யதா
அமெரிக்கா, அட்லாண்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள்மீது தீயணைப்பு க்கருவியைப் பயன்படுத்தியதாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டார்.
ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரி ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
2016-ம் ஆண்டு தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு நீதிமன்றம் 1 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
உக்ரைன் ராணுவக் கருவிகள் வாங்க 400 மில்லியன் யூரோக்கள் கொடுத்து உதவுவதாக, ஃபின்லாந்து அறிவித்திருக்கிறது.
திபெத்தில் நையிங்சி (Nyingchi) நகரில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருபது பேர் உயிரிழந்தனர்.
டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஸ்ரீ ஓம்கார்நாத் கோயிலில் பல லட்சம் மதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிரீன்லாந்து வெப்பமாக இருப்பதாகச் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
காபோனின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் மௌசா அடாமோ (Michael Moussa Adamo) அமைச்சரவைக் கூட்டத்தின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) நியமிக்கப்படவிருக்கிறார்.