க.ஶ்ரீநிதி
சாலமன் தீவுகளில் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு.
அல்பேனியாவில் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162-ஐ தாண்டியது.
முதற்கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், கஜகஸ்தான் அதிபராக மீண்டும் காசிம் ஜோமர்ட் டோகாயேவ் தேர்வு.
போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனில் இந்த ஆண்டு பனிக்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கால்பந்து உலகக் கோப்பை நடக்கும் கத்தார் மைதானம் அருகே இரானில் கொல்லப்பட்ட அமினிக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்பினர்.
அமெரிக்காவில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீனாவில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பு.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சி வழிநடத்தும் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சவுதி அரேபியா அணி வெற்றிபெற்றது.