க.ஶ்ரீநிதி
சோமாலியாவின் மொகதிஷு பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடந்த தாக்குதலில், பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
சீனாவுடனான பொற்காலம் தற்போது முடிந்துவிட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மக்களைக் கைதுசெய்ய வேண்டாம் என சீன அரசிடம் ஐ.நா கேட்டுக் கொண்டிருக்கிறது.
பயனாளர்களின் விவரங்களைச் சட்ட விரோதமாகக் கசியவிட்டதாக, மெட்டா நிறுவனத்துக்கு அயர்லாந்தின் தகவல் பாதுகாப்புப்பிரிவு, 265 மில்லியன் யூரோ அபராதம் விதித்திருக்கிறது.
உகான்டாவில், எபோலா அதிகமாகப் பரவும் இரண்டு மாவட்டங்களில் தனிமைப்படுத்துதல் காலத்தை 21 நாள்களாக உயர்த்தி அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக, ஷாங்காயிலுள்ள டிஸ்னிலேண்ட் தற்காலிகமாக மூடப்பட்டது.
குரங்குகளுக்கு விருந்தளித்துக் கொண்டாடிய தாய்லாந்து மக்கள். விதவிதமான பழங்களைப் ருசித்து மகிழ்ந்த குரங்குகள்.
உலகின் மிகப்பெரிய செயல் நிலை எரிமலையான ஹவாயின் மௌனா லோ என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
மங்கோலியாவில் காலநிலை மாற்றம் காரணமாக, ஆடு மாடு வளர்ப்பு சிக்கலாகியிருப்பதாக மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.