சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாம்பி வைரஸ் | சீனா - கத்தார் ஒப்பந்தம்- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சு.உ.சவ்பாக்யதா

சைபீரியாவில் பனியில் புதைந்த 48,500 ஆண்டுகள் பழைமையான 'ஜாம்பி' வைரஸை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டெடுத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பின் ரப்பானி கர் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சரை காபூலில் சந்தித்து அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தினார்.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா, முதல் உலகப் போர் பாணியில் அகழி அமைப்புகளை தோண்டுகிறது என முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ தலைவர் கூறியிருக்கிறார்.

Andriy Andriyenko

தைவானின் புதிய ஜனாதிபதி சாய் இங்-வெனை பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

Chang Hao-an

சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா, அந்த நாட்டு அரசுக்கு எதிரான கருத்துகள் கூறியதையடுத்து, தலைமறைவானார். தற்போது அவர் டோக்யோவில் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷென்சோ-15 திட்டம் மூலம் தனது சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியது.

Guo Zhongzhen

நாடவ் லேபிட் என்ற இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளர் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்தது, இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து இஸ்ரேலிய தூதரகம் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கனடாவின் கோல்கீப்பர் மிலன் போர்ஜனை குரோஷிய ரசிகர்கள் கேலி செய்ததற்காக, FIFA அந்த நாட்டின் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது.

Hassan Ammar

சீன போராட்டங்களைச் செய்தியாக்கிய எட் லாரென்ஸ் என்ற பிபிசி செய்தியாளர், தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Vincent Thian

சீனா-கத்தார் இடையே இயற்கை திரவ எரிவாயு கொள்முதல் மற்றும் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ரஷ்ய வீரர்களை, அவர்களின் மனைவிகள் பாலியல் வன்கொடுமை செய்ய ஊக்குவிக்கிறார்கள் என ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார்.

James Manning