க.ஶ்ரீநிதி
சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடக் கூட்டமாக திரண்டனர்.
"வெற்றி பெறும் வரை ரஷ்யா உடன் தொடர்ந்து போரிடுவோம்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியா 24 மணி நேரத்தில் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளதாகத் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
2035-க்குள் சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் வரை பாயும் ஏவுகணைகளை ஜப்பான் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
மெக்சிகோ நாட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலி நாட்டின் ஆண்டோஃபாகஸ்டா பகுதியில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவு.
இத்தாலியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ரஷ்யாவின் பிரபல பாலே நடனக் கலைஞர் செர்கி பொலுனின் நிகழ்ச்சி ரத்து. அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டாட்டூ குத்தியிருந்ததால் நிகழ்ச்சி ரத்து.
கம்போடியாவில் 26 பேரை பலிகொண்ட ஹோட்டல் தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் இதுவரை 1,668 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆர் எஸ் எஃப் ( ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பாடர்ஸ்) தகவல்.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் வான வேடிக்கைகளுடன் கொண்டாடப்பட்டது.