எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு... ஈஸி டிப்ஸ் 10! | #VisualStory

சத்யா கோபாலன்

எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவை கால்சியம். கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப்பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருள்கள். தினசரி, நம் உடலுக்கு 1 - 1.3 கிராம் (1000- 1300 மில்லி கிராம்) கால்சியம் தேவை. `லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ எனும் பால் ஒவ்வாமை உடையவர்கள், தினசரி சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு சாப்பிட்டாலே ஒரு கிராம் (1000 மி.கி) கால்சியம் கிடைத்துவிடும்.

பால் பொருள்கள்

100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது.

மீன்

ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. இதனைச் சாப்பிடுவதால் எலும்பு விரைவில் கூடும்.

ஆட்டுக்கால்

கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.

கொள்ளு

புரொக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம். 

புரோகோலி

ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. 100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் உள்ளது.

பழங்கள்

கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கவனிக்க... கீரைகளை அசைவத்தோடு சேர்த்துச் சாப்பிடக்கூடாது. இரவில் சாப்பிடக் கூடாது. இதனால், செரிமானம் தாமதப்படும். காலை, மதிய உணவில் கீரை சாப்பிடலாம். 

கீரை

முந்திரியில் 37 மி.கி., பாதாமில் 26 மி.கி., பிஸ்தாவில் 10 மி.கி கால்சியம் உள்ளது. மேலும், உடலுக்குத் தேவையான மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புகள் உள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடைந்த எலும்பு விரைவில் குணமாகும்; எலும்பு நோய்கள் தடுக்கப்படும்.

முந்திரி

100 மி.கி பேரீச்சம் பழத்தில் 39 மி.கி கால்சியம் உள்ளது. அதேபோல், மாங்கனீஸ், தாமிரம், மங்கனீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

பேரீட்சை

100 மி.கி கறுப்பு உளுந்தில் 13 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்து சுண்டல் சாப்பிடுவது நல்லது. இதுதவிர, முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சுண்டல் செய்து சாப்பிடலாம்.

உளுந்து