முதியவர்கள் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! #VisualStory

போ.நவீன் குமார் & இ.நிவேதா

வயது முதிர்ச்சியின் காரணமாக முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு. முதியவர்கள் தங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், கால்சியம் போன்றவை சரிவிகிதத்தில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

முதியவர்கள் | Freepik

கேரட், அவரை, பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கேரட்

கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் கோதுமை ரொட்டி அல்லது கோதுமை பிரட் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

சிறுதானியம்

பால் மற்றும் பால்பொருள்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் பால் அருந்துவது நல்லது.

பால்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், சாத்துக்குடி போன்றவற்றை பழமாகவும், சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம் .

Lemon Juice | Photo: Pixels

தினமும் முந்திரி, பாதம் நட்ஸ் வகைகளை தவறாது சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகளையும் கட்டாயம் சேர்த்துக் கொள்வது அவசியம் .

முந்திரி

தவிர்க்க வேண்டியவை: துரித உணவுகள் அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, இறைச்சி, ஊறுகாய். எண்ணெயில் வறுத்த பொருள்கள், அதிக மசாலா பொருள்கள், சிப்ஸ் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் & தொக்கு

வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்து அதற்கு பதிலாகக் கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

நாட்டு சர்க்கரை வகைகள்

முதியவர்கள் மதுபானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதேபோல, முழுவதும் சமைக்கப்படாத உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது.

மதுபானங்கள்

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ற உணவு முறைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு