ஓணம் ஸ்பெஷல்: சத்யா விருந்தில் பரிமாறப்படும் விதவித உணவுகள் இவைதான்! #VisualStory

இ.நிவேதா

அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையில் கொண்டாட்டங்கள் பல இருந்தும், கண்களைக் கவரும் வகையிலும், நாவுக்கு விருந்தளிக்கும் வகையிலும் தயார் செய்யப்படும் சத்யா உணவை (Sadhya Meal) மனம் மிக விரும்பும்.

ஓணம் கொண்டாட்டம் | pixabay

தேங்காய் எண்ணெய், நெய், முந்திரி மற்றும் தேங்காய்ப் பால் போன்ற பொருள்களைக் கொண்டு, ஆரோக்கியமான முறையில் சத்யா உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் எண்ணெய்

இந்த உணவில் குறைந்தது 26 வகையான உணவுகளாவது இருக்கும். அதிகபட்சமாக 64 உணவு வகைகள் வரை மதிய உணவுக்குப் பரிமாறப்படும்.

pixabay

சம்மணங்காலில் அமர்ந்து, வாழையிலையில் வைக்கப்படும் அத்தனை உணவுகளையும் உண்ணும்போது, `இதுவல்லவோ சொர்க்கம்' என நினைக்கத் தோன்றும்.

pixabay

இதில் பரிமாறப்படும் பல உணவுகள் குறைந்த அளவு மசாலாவை கொண்டு தயார் செய்யப்படும். சுவையும் அபாரமாக இருக்கும்.

Masala

சத்யாவில் வழங்கப்படும் முக்கிய உணவு, சிவப்பு அல்லது பழுப்பு அரிசி.

அரிசி

கெட்டியான பருப்பு, புளி தக்காளி மற்றும் கொஞ்சம் மசாலா பொருள்களைச் சேர்த்த ரசம், காய்கறிகளுடன் கூடிய சாம்பார்.

பருப்பு / சாதம்

காலன்: தயிர், தேங்காய் மற்றும் நேந்திர வாழைப்பழம் அல்லது கிழங்குகளைப் பயன்படுத்தித் தயார்செய்யப்படும் பாரம்பர்ய உணவு.

தயிர்

அவியல்: பலவகையான காய்கறிகளைத் தேங்காய் எண்ணெயில் சமைக்கும் உணவு.

அவியல்

ஓலன்: மசாலா ஏதும் சேர்க்காமல் பரங்கிக் காய், பட்டாணி, தேங்காய்ப் பால் கலந்து செய்யும் ஒருவகை உணவு.

தேங்காய்ப் பால்

கூட்டுக்கறி: சன்னாவோடு வாழைப்பழம் அல்லது கிழங்கு சேர்த்துச் சமைக்கப்படும் உணவு.

எரிசேரி: தேங்காய்ப் பாலில் பூசணி கலந்து சமைக்கப்படும் உணவு.

பொரியல்

பச்சடி: புளிப்பு அல்லது இனிப்பு சுவையிலான ரைதா, வெள்ளரி அல்லது அன்னாசிப்பழம் சேர்த்துத் தயாரிக்கப்படும்.

Onion Raita | Archanas Kitchen

புளிசேரி: மஞ்சள் வெள்ளரியுடன் சேர்த்துச் செய்யப்பட்ட புளிப்புச் சுவையுள்ள உணவு.

தோரன்: தேங்காய்த் துருவல் சேர்த்துச் சமைத்த காய்கறிகள்.

புளிசேரி

மூன்று அல்லது நான்கு வகையான பாயசம் இனிப்புக்காகப் பரிமாறப்படுகிறது.

பாயசம் | iStock

இவற்றோடு வாழைப்பழம், ஊறுகாய், பப்பாளி, நேந்திர பழ சிப்ஸ், நெய் மற்றும் மோர் போன்றவை பரிமாறப்படுகின்றன.

சத்யா உணவோடு ஓணத்தைக் கொண்டாடுங்கள்!

ஊறுகாய் & தொக்கு