கி.ச.திலீபன்
பெண்ணுறை (Femele condom) கண்டறியப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில் அதன் பயன்பாடு மிகக்குறைந்த அளவே உள்ளது.
கருத்தடை சாதனங்களிலேயே கையாள்வதற்கு எளிதாக இருப்பது காண்டம்தான். ஆகவே ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் கூட காண்டம் பயன்படுத்தலாம்.
குழாய் போன்ற பெண்ணுறையை, உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும்.
பெண்ணுறையில் மெலிதான பிளாஸ்டிக் (Polyurethane) பயன்படுத்தப்படுகிறது. ஆணுறையில் பயன்படுத்தப்படும் லாடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பெண்ணுறை உகந்தது.
உறவு சார்ந்த இன்பம் இருபாலினருக்கும் ஆணுறையை விட பெண்ணுறையில் அதிகம் கிடைக்கும். பெண்ணுறை மிக மெலிதாக இருப்பதால் உராய்வுத்தன்மையை ஆண் நன்கு உணர முடியும்.
ஆணுறுப்பு விரைத்த பின்பே ஆணுறையைப் பொருத்த முடியும். ஆனால், பெண்ணுறையை உறவு கொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகவே பொருத்திக் கொள்ளலாம். இதனால் பதற்றமின்றி உறவு கொள்ளலாம்.
பெண்ணுறையின் வெளிவளையம் ‘க்ளிட்டோரிஸ்’ எனப்படும் பெண்ணின் உணர்ச்சியைத் தூண்டுகிற பகுதியில் உராய்ந்து தூண்டுவதால் பெண்ணுக்கு உறவின்போது அதிக இன்பம் கிடைக்கிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு மூலக்காரணியான Human papillomavirus (HPV) போன்ற பால்வினைத் தொற்றுகளிலிருந்து பெண்ணுறை பாதுகாக்கிறது.