குரங்கு அம்மை: முன்னெச்சரிக்கை முதல் அறிகுறிகள் வரை! #VisualStory

இ.நிவேதா

1958-ம் ஆண்டு டேனிஷ் ஆய்வகத்தில் குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ (Monkeypox) என்ற பெயர் சூட்டப்பட்டது.

Monkey

குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ்கள், எலி, முயல், அணில் போன்ற சிறிய கொறித்துண்ணும் பாலூட்டிகள் மூலம்தான் மனிதனுக்குப் பரவுகிறது.

எலி | Pixabay

நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்றவை உண்டாகும்.

தலைவலி | pixabay.com

நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது இந்த நோய்த்தொற்று பரவும். இருமும்போது வெளிப்படும் எச்சில் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் மிகவும் அருகில் இருப்பவர்களுக்கு இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் மிகப்பெரிய அளவில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி

குரங்குக் அம்மை பரவாமல் தடுக்கவும், குரங்கு அம்மையால் பாதிக்கப்படும் பட்சத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை | Twitter

அதில் சமீபத்தில் குரங்கு அம்மை தொற்று பதிவான அல்லது சந்தேகிக்கப்படும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

விமானப் பயணம்

குரங்கு அம்மை தொற்று சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தனிமை | Pixabay

சந்தேகத்துக்குரிய நபர்களின் ரத்தம், சளி, கொப்புளங்களில் உள்ள நீர் போன்றவை ஆய்வகப் பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Blood (Representational Image)

இந்தப் பரிசோதனையில் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், நோயாளியோடு கடந்த 21 நாள்கள் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய வேண்டும்.

Photo by Helena Lopes from Pexels

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது அனைத்து தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

சிகிச்சை

பெரும்பாலான தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகிறது என்ற பொது எண்ணம் உள்ளது. எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியை தொடர்புபடுத்தாமல், அந்த தொற்று வைரஸின் பெயரோ, திரிபுகளையோ வைத்து குறிப்பிடுவது நல்லது.

ஆப்பிரிக்கா | AP

’குரங்கு அம்மை’ தொற்றின் பெயரை மாற்றுவதற்காக 29 அறிவியலாளர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

குரங்கு அம்மை ( மாதிரி படம்)

’குரங்கு அம்மை’க்கு பெயர் மாற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

WHO - உலக சுகாதார நிறுவனம்