கடைசியாக ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்தீர்கள்? - தேசிய ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் தினம் இன்று

இ.நிவேதா

இப்போது ஃபிரிட்ஜ் இல்லாதே வீடுகளே இல்லை. அந்த அளவுக்கு ஃபிரிட்ஜ் நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.  

ஃப்ரிட்ஜ்

காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க  ஃபிரிட்ஜ் பயன்படுகிறது. ஆனால் ஃபிரிட்ஜை பராமரிக்கத் தவறும்பட்சத்தில், கிருமிகள் பெருகி உடல்நலன் கெடவும் வாய்ப்புள்ளது.

Vegetables

ஆசை ஆசையாக ஃபிரிட்ஜ் வாங்கும் பலர் அதைச் சுத்தம்செய்யத் தவறிவிடுகின்றனர். ஃபிரிட்ஜை சீராகப் பராமரிப்பதை வலியுறுத்தவே, ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி, `தேசிய குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்யும் தினம்’ (National Clean Out Your Refrigerator Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஃபிரிட்ஜ் | pixabay

இந்நாளில்  ஃபிரிட்ஜை எப்படி எளிய முறைகளில் சுத்தம் செய்வது என்பதைப்  பார்ப்போம். 

ஃபிரிட்ஜ் | pixabay

கெட்டுப்போன காலாவதியான உணவுகளை முதலில் ஃபிரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த உணவோடு வேறு உணவுகள் சேர்ந்திருக்கும் பட்சத்திலோ, கெடும் நிலையில் வைக்கப்பட்டிருந்தாலோ அவற்றையும் அகற்ற வேண்டும். 

pixabay

அகற்றும் உணவுகளை சீல் செய்யப்பட்ட பேக்கில் போட்டு பின் குப்பைகளில் போடுவது நல்லது. இதனால் குப்பையில் வீசப்படும்போது வேறு எந்த உயிரினமும் அதை சாப்பிடாது.

pixabay

கெட்டுப்போன காலாவதியான உணவுகளை, மீண்டும் உபயோகிக்கக் கூடிய கன்டெய்னர்களில் வைத்திருப்பின், அவற்றை நன்றாகச் சூடான சோப் தண்ணீரில் சுத்தம் செய்து பின் உபயோகிக்க வேண்டும்.

ஃபிரிட்ஜ்ஜில் இருந்து நீக்கி சுத்தம் செய்யக்கூடிய ஷெல்ஃப்  போன்ற பகுதிகளைத் தனியாக எடுத்து விட வேண்டும். இவற்றைச் சூடான சோப் நீரில் சுத்தம் செய்து, சுத்தமான டவல் மூலமாக உலர்த்த வேண்டும். 

pixabay

ஒருவேளை ஃபிரிட்ஜ்ஜில் இருந்து எடுக்கப்படும் கண்ணாடி பொருட்கள் குளிர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், அவற்றை அறை வெப்பநிலைக்கு வரும் வரை வைத்திருக்க வேண்டும். 

pixabay

ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கப்படும் கண்ணாடிப் பொருள்கள் குளிர்ச்சியாக இருந்து, அவற்றை சூடான நீரில் கழுவுகையில், உடனடியாக அவை விரிசல் விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

pixabay

அதன் பின் ஃபிரிட்ஜ் முழுதும் சூடான சோப் நீரில் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பின் சாதாரண நீரில் சுத்தம் செய்து, சுத்தமான டவல் மூலமாக ஒத்தி எடுத்து உலர்த்த வேண்டும்.

pixabay

ஃபிரிட்ஜ் நன்றாக உலர்ந்த பிறகு ஃபிரிட்ஜ்ஜின் பகுதிகளை அடுக்கி, அதில் பொருட்களைத் திரும்ப எடுத்து வைக்க வேண்டும். 

ஃபிரிட்ஜ்

ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் வேலைகள் முழுதாக முடிந்த பின்னர், கைகளை நன்றாக சோப் தேய்த்து கழுவுவவும்.  

pixabay