சோம்பலின் அறிகுறிகள்; விடுபடும் வழிகள்! #VisualStory

இ.நிவேதா

ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, `எனக்கு அசதியாக இருக்கிறது, எனக்கு செய்யத் தெரியாது, என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை' என்றெல்லாம் கூறுபவர்களா நீங்கள்? இவை போன்றவைதான் வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.

pixabay

தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.

pixabay

சோம்பல் என்பது என்ன?: `சோறு கண்ட இடம் சொர்க்கம்; திண்ண கண்ட இடம் தூக்கம்’ என்பது பழமொழி. சோம்பேறிகள் பொதுவாக சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

pixabay

பெரும்பாலும் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தூங்குவதிலேயே பாதி நேரத்தைக் கழிப்பார்கள். கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும் செயல்.

pixabay

சோம்பலை போக்க சில எளிய வழிகள்: சோம்பல் என்பது ஒரு வியாதியல்ல. சோம்பலை, சில எளிய வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் மாற்றிவிடலாம்.

pixabay

உடற்பயிற்சி: தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இது உடலை சுறுசுறுப்பாக மாற்ற உதவும்.

pixabay

ஊக்கம்: சோம்பலில் இருந்து விடுபட ஊக்கமளிப்பது போன்ற வசனங்களை சொல்லிக்கொள்ளுங்கள். Never... Ever... give up...

pixabay

ஒரே வேலையை செய்துகொண்டிருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். எனவே, பிடித்தமான விஷயங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

pixabay

உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள். அதிகப்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைக் குறையுங்கள்.

Oil (Representational image) | Image by congerdesign from Pixabay

உலக சோம்பல் தினம்... ஆகஸ்ட் 10-ம் தேதி.