எப்போதெல்லாம், எப்படி கை கழுவ வேண்டும்? | #VisualStory

இ.நிவேதா

பெரும்பாலான நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க, கை கழுவுவது அவசியமாகப் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கம். கடமைக்கென கைகழுவாமல், முறையாகக் கைகழுவ வேண்டும்.

pixabay

அன்றாடம் பல் துலக்குதல், குளித்தல், சாப்பிடுதல் போல, கைகழுவுதலும் முறையாக குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

pixabay

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகுதான் பல் துலக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை அவசியம் கழுவ வேண்டும்.

pixabay

உங்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அதைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கழிப்பறை சென்று வந்ததும் கை கழுவ வேண்டும்.

pixabay

யாரேனும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களைத் தொடும்பட்சத்தில் கைகளை கழுவுவது அவசியம். இல்லையேனில் நோயாளிகளின் மூலம் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

disease

இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.

இருமல் மருந்து

கை கழுவ அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதில் குழாய்த் தண்ணீரில் கைகளை நீட்டிக் கழுவ வேண்டும்.

pixabay

கை கழுவுவதன் மூலம் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வோம்.

pixabay