மார்பகங்கள்: ஒன்று பெரியது, ஒன்று சிறியது; பெண்களுக்கு இந்த வித்தியாசம் இயல்பானதா? | #VisualStory

இ.நிவேதா

பெண்களில் சிலருக்கு ஒரு பக்க மார்பகம் பெரிதாகவும், மறுபக்க மார்பகம்  சிறிதாகவும், வடிவில் சற்று வித்தியாசமாகவும்  இருக்கலாம். இது பிரச்னையா அல்லது இயல்பான ஒன்றா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கலாம். 

woman | pixabay

பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களுடைய உடலின் இரு பக்கங்களும் ஒன்றுபோல இருக்காது. பார்ப்பதற்குப் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும், பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும். 

Human Body | pixabay

மனித உடலின் வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பதுபோல மறுபக்கத்தில் இருக்காது. இயற்கை, மனித உடலமைப்பை இப்படித்தான் படைத்திருக்கிறது.

woman | pixabay

திருமணமான பெண்களில் பெரும்பாலானோருக்கு இடது மார்பகம் வலது பக்கத்தைவிடச் சற்று பெரிதாக இருக்கும். இதற்குக் காரணம் பெரும்பாலான ஆண்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான். 

couple | pixabay

இந்தக் காரணமில்லாமலும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் இயல்பானதுதான். ஒருவேளை சாதாரணமாகப் பார்த்தாலே வித்தியாசம் நன்கு தெரிகிறது என்றாலும், பெரும்பாலும் அதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது.

woman | pixabay

வெளியே தெரியும் அளவுக்கு வித்தியாசம் தெரியும் நிலையில் இருக்கிற பெண்களும், உடல் வடிவத்துக்கு முக்கியத்துவம் தருகிற மாடலிங், ஆக்டிங் போன்ற வேலைகள் செய்கிற பெண்களும் சிறிய அறுவைசிகிச்சையின் மூலம் இதைச் சரிசெய்து கொள்ளலாம். 

மாதிரிப்படம் | pixabay

மற்ற பெண்களுக்கு அறுவை சிகிச்சையெல்லாம் அவசியமில்லை. பெண்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை. 

அறுவை சிகிச்சை | pixabay

இதில் ஏதேனும் பிரச்னையாக இருக்குமோ என்று பயப்படும் பெண்கள், தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.

டாக்டர் | pixabay