``உலகின் செல்வந்தர்கள் மிகுந்த 10 நகரங்களின் பட்டியல்''... 5 இடங்களைத் தட்டி சென்ற அமெரிக்கா...

இ.நிவேதா

ஒரு நாட்டின் செல்வம் மற்றும் செல்வந்தர்களின் எண்ணிக்கையை வைத்தே, அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

pixabay

பெரும்பாலும் செல்வம் மிகுந்த, செல்வந்தர்கள் மிகுந்த நாடுகள் அபாரமான தொழில்துறை வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. அங்கு வசிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

pixabay

இந்நிலையில், உலகின் 10 செல்வமிக்க நகரங்களின் பட்டியலையும், அந்த நகரங்களில் வசிக்கும் செல்வந்தர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. `ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் (Henley & Partners).

pixabay

செல்வமிகுந்த நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 3,45,600 மில்லியனர்கள் உள்ளனர்.

pixabay

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 3,04,900 செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

pixabay

மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி இடம்பிடித்துள்ளது. இப்பகுதியில் 2,76,400 செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

pixabay

லண்டன் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு 2,72,400 செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

pixabay

சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 249,800 செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

pixabay

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் முறையே 6, 7, மற்றும் 8 - வது இடத்தை தக்க வைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் 1,92,400 செல்வந்தர்களும், சிகாகோவில் 1,60,100 செல்வந்தர்களும், ஹூஸ்டனில் 1,32,600 செல்வந்தர்களும் வாழ்கின்றனர்.

pixabay

சீனாவின் பெய்ஜிங் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. இங்கு 1,31,500 செல்வந்தர்கள் வசிக்கின்றனர். சீனாவின் ஷாங்காய் நகரம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 1,30,100 செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

pixabay

முதல் 10 செல்வமிகு நகரங்களின் பட்டியலில் அமெரிக்கா 5 இடத்தை தட்டிச் சென்றுள்ளது.

pixabay