இரவா, பகலா... தாம்பத்ய உறவுக்கு எந்த நேரம் சரியானது? #VisualStory

இ.நிவேதா

உலகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது. அதனால்தான், நம் கலாசாரத்தில் 'முதலுறவு நாளை முதலிரவு' என்று குறிப்பிடுகிறார்கள். 

Night | pixabay

அதே நேரம், பகல் பொழுதுகளில் உறவு கொள்ளக் கூடாதா, பகல் பொழுதில் உறவு கொண்டால் சீக்கிரம் கருத்தரிக்குமா என்பது போன்ற கேள்விகள் சிலருக்கு உண்டு.

Representational Image

மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பகலெல்லாம் வேட்டையாடிவிட்டு, ஓய்ந்திருக்கும் இரவு வேளைகளில் உறவுகொள்ள ஆரம்பித்தார்கள். குடும்ப அமைப்பு உருவான பிறகும், தாங்கள் உறவு கொள்வது மற்றவர்கள் கண்ணில் படக்கூடாது என இரவையே தேர்ந்தெடுத்தார்கள். 

family | pixabay

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் வரை, இரவுகள் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரைக்கும் மிகவும் நீண்டதாக இருந்தன. அது உறவுக்கு தோதாக இருந்தது. இப்படித்தான் தாம்பத்ய உறவுக்கான பொழுதாக இரவு மாறியது. 

மற்றபடி, பகலில் உறவு கொண்டால் சீக்கிரம் கருத்தரிக்க முடியும் என்பதற்கும், அதிகாலை நேரமும் மாலை நேரமும் பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும் என்பதற்கும் மருத்துவ ஆதாரங்கள் இல்லை. 

ஒருவேளை உங்களுக்கு அப்படி தோன்றுகிறது என்றால், தாராளமாக உறவு கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்; பொழுதுகளில் ஒன்றுமில்லை.

marriage | pixabay

கூச்சம் காரணமாக உறவு கொள்ளத் தயங்குகிற புதுமணத் தம்பதியருக்கு இரவும் இருட்டும்தான் பொருத்தமானது. திருமணமாகி, சில பல வருடங்கள் ஆனவர்களென்றால் குழந்தைகள் தூங்கிய பிறகு உறவு கொள்வதற்கும் இரவுதான் வசதி. 

kids sleeping | pixabay

உடலமைப்பில் சின்னச் சின்ன குறைபாடுகள் இருப்பதாக நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்பவர்களுக்கும் இரவும் இருட்டும் முழு மனதுடன் உறவில் ஈடுபட உதவி செய்யும். 

help | pixabay

மற்றபடி, இன்றைக்கு இரவை பகல்போல மாற்றும் மின்சார விளக்குகள் இருக்கின்றன. அதே நேரம் ஜன்னல்களையும் கதவையும் மூடினால் நண்பகலும் இரவுபோலத்தான் இருக்கிறது, தற்போது.

window | pixabay

கூடவே பாதுகாப்பான கதவுகளும் இருக்கின்றன. அதனால், தம்பதியருக்கு விருப்பமிருந்தால் எந்நேரமும் தாம்பத்ய உறவுக்கான நேரமே.

door | pixabay