சு.நீலாப்ரியா
பிரேசில் - வெள்ளை நிற உடையணிந்து, கடல் அலையில் நின்று ஏழு அலைகளைக் கடந்தால் நினைத்தது நடக்கும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை.
டென்மார்க் - நள்ளிரவில் உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து கண்ணாடித் தட்டுகளை வீசியெறிந்து உடைத்து, புத்தாண்டை வரவேற்கின்றனர்.
ஈக்வடார் - புத்தாண்டு இரவில் தேவையற்ற துணிகள், காகிதங்களில் செய்த உருவ பொம்மைகளை எரித்துக் கொண்டாடுகின்றனர்.
ஸ்பெயின் - புத்தாண்டு நாளில் 12 திராட்சைப் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஜப்பான் - 108 முறை மணியடித்து புத்தாண்டை வரவேற்கின்றனர். இதன் மூலம் கடந்த வருடத்தின் பாவங்கள் கழியும் என்பது அவர்களது நம்பிக்கை.
இங்கிலாந்து - புத்தாண்டு தினம் வீட்டுக்கு வரும் முதல் ஆண் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என நம்பப்படுகிறது.
ரஷ்யா - கிறிஸ்துமஸ் மரம் போன்று, புத்தாண்டு மரம் ஒன்றை வைத்தும், பரிசுகள் கொடுக்கும் பனி தேவதை வேடமிட்ட பெண் குழந்தைகளை மரத்தின் கீழ் அமர வைத்தும் புத்தாண்டை வரவேற்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் - ஆரஞ்ச், ஆப்பிள் போன்று உருண்டையான வடிவில் இருக்கும் 12 பழங்களைப் பரிமாறி புத்தாண்டை வரவேற்கின்றனர்.
கிரேக்கம் - புத்தாண்டு அன்று வெங்காயத்தை வீட்டின் நுழைவாயிலில் கட்டுவதால் அந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
சீனா - பட்டாசு வெடித்து, டிராகன், சிங்க நடனங்கள், சுவையான உணவு மற்றும் ஆடல் பாடல்கள் என உற்சாகமாகக் கொண்டாடப்படும்.