இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! |#AllAboutLove | Visual Story 1

இ.நிவேதா

மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று. அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல்...

இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும், ஏனோ நாம் லவ் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். 

பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்கள் காதல் என்பதை மட்டும் கண்டறியவே இல்லை. 

காதல், எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது... எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. விபத்தா, விதியா? தெரியாது.

Perfect couple எனப்படுபவர்கள் நொறுங்கி வீழ்கிறார்கள். சரிப்படாது என நினைப்பவர்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள். எப்படி? தெரியாது.

ஒன்று மட்டும் தெளிவு. காதல் அப்படியேதான் இருக்கிறது. அங்கேயேதான்.

காதலைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். எது காதல், எப்படிக் காதலிக்கலாம், காதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, காதலில் என்ன என்ன பிரச்னைகள் தோன்றலாம், எந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்கலாம்...

அதற்கு முன், எது காதல் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதிலென்ன குழப்பம்? இருக்கிறது.

க்ரஷ் (Crush), இன்ஃபாச்சுவேஷன் (Infatuation), காதல். இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். பொதுவாக இந்த மூன்றையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பார்க்கும் போக்கு எல்லா காலத்து டீன் ஏஜ் பருவத்தினரிடம் அதிகம் உண்டு.

Pexels

க்ரஷ்: ஒருவர் மீது வரும் ஈர்ப்புதான். ஆனால், அது வெறும் எதிர்பாலின ஈர்ப்பாக மட்டுமிருக்காது. அவர் திறமை பார்த்தோ, அவர் பழகும் விதம் பார்த்தோ, அவரின் எதோ ஒரு குணத்தைப் பார்த்தோ வரும். பெரும்பாலும் யாருடன் நமக்குப் பழக வாய்ப்பில்லையோ, யாருடன் நட்பு பாராட்ட வழியில்லையோ அவர் மீது வரும்.

Pexels

இன்ஃபேச்சுவேஷன்: யார் மீது நமக்கு இன்ஃபாச்சுவேஷன் இருக்கிறதோ அவர் நம் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பார். நம்முடைய பெரும்பாலான நேரத்தை அவருடன் தான் கழித்துக் கொண்டிருப்போம். அந்த நெருக்கத்தின் காரணமாகவே இந்த ஈர்ப்பு தோன்றும். இது சில சமயம் காதலாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் மாறலாம். அல்லது மாறாமலும் போகலாம்.

காதல்: அது ஓர் உணர்வு. ஒருவருக்கு காதல் எப்போது வருமென சொல்ல முடியாது. ஆனால், எப்படியெல்லாம் வரலாம் எனச் சொல்லலாம். Love Out Of Compulsion -  கட்டாயத்தினால் வரும் காதல். பெரும்பாலான டீன் ஏஜ் காதல்கள் இந்த வகைதான்.

Pixabay

Love Out OF Sympathy: ஒருவர் மீது நமக்கு வரும் அனுதாபத்தை காதல் என புரிந்துகொள்வது; அல்லது அனுதாபத்தால் காதல் வந்துவிட்டதென நம்புவது இரண்டுமே குழப்பம்தான். காதலுக்கும் அனுதாபத்தால் வரும் உணர்வுக்கும் அடிப்படை வித்தியாசம் காதல் நிரந்தரமானது; அனுதாபத்தால் வருவது தற்காலிகமானது. 

Love Out Of Understanding: இதுதான் காதல். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதால், அந்தப் புரிதலால் எழும் மரியாதை மற்றும் அன்பால் கட்டப்படும் கோட்டை. இந்தக் காதலுக்கு சக்தி அதிகம்; ஆயுள் அதிகம்.

காதலிப்போம்!

Pexels