பால்வினை நோய்களை தவிர்க்க சோப் வாஷ் உதவுமா? | #VisualStory

இ.நிவேதா

திருமணம் தாண்டிய, துணை தாண்டிய உறவுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, `பால்வினை நோய் ஏதாவது வந்துவிடுமோ' என்ற அச்சமும் சிலருக்கு ஏற்படுகிறது.  

pixabay

என்னென்ன பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால், பால்வினை நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிற கேள்வியும், தேடலும் அதிகரித்திருக்கிறது. அவற்றில் ஒன்று, `உறவுக்குப் பிறகு அந்தரங்க உறுப்பை சோப் போட்டுக் கழுவினால் பால்வினை நோய்கள் வராதா?' என்கிற கேள்வி. 

pixabay

உறவுக்குப் பின், உடனடியாக உறுப்பைச் சுத்தப்படுத்தினால், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. தன் துணையைத் தவிர்த்து, வேறொருவருடன் பாதுகாப்பில்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டோம் என்று அஞ்சுபவர்கள், அந்தரங்க உறுப்பை 2 அல்லது 3 முறை சோப்பைப் பயன்படுத்தி நன்கு சுத்தமாக்க வேண்டும். 

pixabay

இதனால், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். அதுவும் இந்த ஓரளவு வாய்ப்பு ஆண்களுக்கே பலனளிக்கும். பாலுறவைப் பொறுத்தவரை, ஆண்கள் விந்தை வெளியேற்றுவதால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

pixabay

ஓர் ஆண் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினைத் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் விந்தணுக்களிலும் அந்தக் கிருமிகள் இருக்கும். உறவின்போது இக்கிருமிகள் பெண்ணுறுப்பில் சேகரமாகிவிடும். 

pixabay

பெண்ணுறுப்பில் இருக்கிற சளிப்படலம் வழியாகச் சுலபமாக இக்கிருமிகளால் உடலுக்குள் சென்றுவிட முடியும். உறவுக்குப் பின் சோப் போட்டு வாஷ் செய்தாலும், பலன் இருக்காது. பெண்ணுறுப்பின் அமைப்பு, முழு உறுப்புமே கிருமிகள் சுலபமாக உள்நுழையக்கூடிய வகையில்தான் இருக்கிறது.

pixabay

பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெண்ணுறுப்பு திரவத்திலும் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்க்கிருமிகள் அடர்த்தியாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் ஆணுறுப்பின் முன்பகுதியை மட்டுமே கிருமிகளால் தாக்க முடியும். ஆணுறுப்பின் அமைப்பு அப்படிப்பட்டது.

pixabay

ஆணுறுப்பின் முன்தோல் நீக்கிய ஆண்களைக் குறைந்த அளவே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்க்கிருமிகள் தாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

pixabay

முன்தோலை நீக்காதவர்களுக்கு, ஆணுறுப்பின் முன்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடைப்பட்ட வழியே கிருமிகள் உடலுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்றாலும் உறவின் மூலமாக, ஆண்களைவிடப் பெண்களுக்கே ஹெச்.ஐ.வி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

pixabay

பால்வினை நோய்களே வராமல் இருப்பதற்கு பாதுகாப்பான முறை என்ன?  

திருமணம் தாண்டிய, துணை தாண்டிய உறவுகளில் ஈடுபடாமல் இருப்பது. சுய இன்பம் செய்வதுடன் நிறுத்திக் கொள்வது. இவைதான் பாதுகாப்பான வழிமுறைகள்.

pixabay

ஆணுறைகளும் பால்வினை நோய்களைத் தடுக்கக்கூடியவையே என்றாலும், அவை 98 சதவிகிதம் மட்டுமே பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியும். உறவின்போது கிழியலாம் அல்லது ஆணுறையைத் தாண்டியிருக்கிற பகுதியின் வழியாக நோய்த்தொற்று பரவலாம்.

pixabay