காண்டம்: தெரிந்துகொள்ள வேண்டியவை! #VisualStory

இ.நிவேதா

காதல் வளர்க்கவும், காமத்துக்கு மரியாதை செய்யவும், தம்பதி காண்டம் பற்றிக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

pixabay

காண்டம் என்றால் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதற்காக மட்டும் பயன்படுத்துவது அல்ல. உலகின் 70 சதவிகித ஆண்களுக்கு உள்ள விந்து முந்துதல் பிரச்னைக்கும் உதவுகிறது.

Baby (Representational image) | Pexels

விந்து முந்துதல் பிரச்னையை சிறிது நேரம் தள்ளிப்போடும் வகையில் காண்டம் இருக்கிறது. இந்த வகை ஆணுறைக்குள் இருக்கிற `அனஸ்தடிக் ஜெல்' ஆணுறுப்பின் ஆர்கசத்தை சற்றுக் குறைத்து, விறைப்படைவதை கொஞ்ச நேரம் நீட்டிக்கச் செய்யும். இதனால், விந்து முந்துதலும் தள்ளிப்போடப்படும்.

pixabay

விறைப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் வைப்ரேட்டருடன் கூடிய காண்டம் பயன்படுத்தலாம். வைப்ரேட்டரின் தூண்டுதல் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விறைப்புத் தன்மையைப் பெறலாம்.

Couple (Representational Image) | Photo by Jonathan Borba from Pexels

மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான வடிவமைப்பில் தயாரான காண்டமும் இருக்கிறது. இதன் மேல் இருக்கிற புள்ளிகள் பெண்ணின் ஆர்கசத்தைத் தூண்டுவதற்கு உதவி செய்யும்.

pixabay

இவற்றை தவிர, ஐஸ்க்ரீம்போல காண்டம்களிலும் பல ஃபிளேவர்ஸ் இருக்கின்றன. சிலவற்றை, சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் இருந்தும்கூட தயாரிக்கிறார்கள். பெண்களுக்கான காண்டம்களும் இருக்கின்றன.

pixabay

ஆணுறையும் சரி, பெண்ணுறையும் சரி... குழந்தை பிறப்பை 98 சதவிகிதம் வரை தடுக்கக்கூடியதே. இதைத் தவிர உறவின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்களையும் தடுக்கும்.

pixabay

ஆணுறை தொடர்பான சில விழிப்புணர்வு டிப்ஸ்: உணவுப் பொருள்களின் காலாவதி தேதியில் காட்டுகிற கவனத்தை, மக்கள் மற்ற விஷயங்களிலும் காட்ட வேண்டும். முக்கியமாக ஆணுறை வாங்குவதிலும்.

pixabay

தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். கட்டாயம் காலாவதி ஆகியிருக்கக் கூடாது. காலாவதியானதைப் பயன்படுத்துகையில் கிழிந்துவிடலாம். நூறு பேரில் 2 அல்லது 3 பேருக்கு இப்படி நிகழ்வதாகத் தெரிகிறது.

pixabay

ஆணுறைகளைக் கழுவிவிட்டு மறுபடியும் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் செய்யவே கூடாது. கணவனுக்கோ, மனைவிக்கோ காண்டம் மறைக்காத பகுதியில் வைரஸால் வருகிற மரு இருந்தால், அது ஒருவருக்கொருவர் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

couple | pixabay

உணவும் உறக்கமும் போலத்தான் காமமும். தேவைப்படாத கருவுறுதலில் அதைத் தொலைக்காமல், உங்கள் தாம்பத்ய வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

pixabay