ஆண்மையற்றவர் என்று யாரையுமே சொல்ல முடியாது; ஏன்? #VisualStory

இ.நிவேதா

`ஆண்மைக்குறைவு' என்ற வார்த்தையை பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஆண்மை என்பது என்ன எனத் தெரியாமலேயே இந்த வார்த்தையை உபயோகித்து கொண்டிருக்கிறோம். 

male

சில ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் கோளாறு இருக்கும், தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாமல் இருக்கும். ஆனால், அவர்களுடைய விந்தணுக்களைப் பரிசோதித்துப் பார்த்தால், மிகத் தரமானவையாக இருக்கும். அந்த ஆண் உறவில் ஈடுபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும். 

love couple | pixabay

சில ஆண்களுக்கு விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுகிற பிரச்னை இருக்கும். பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவதற்கு முன்னரே விந்தணுக்கள் வெளியேறி விடும். இப்படிப்பட்டவர்களின் இணையால் கருத்தரிக்க முடியாமல் போகும். ஆனாலும் அதற்குத் தீர்வுள்ளது.

sperm | pixabay

விந்தணுக்குள் சீக்கிரம் வெளியேறிவிடுகிற பிரச்னை உள்ள ஆண்களின் விந்தணுக்களை எடுத்து மனைவியின் கருப்பையில் செலுத்தி கருத்தரிக்க வைக்க முடியும். இவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். 

pregnant

எதன் அடிப்படையில் ஓர் ஆணுக்கு ஆண்மை இருக்கிறது, இல்லை என்பதைச் சொல்ல முடியும்?

male | pexels

சில ஆண்கள் தாம்பத்ய உறவில் நன்றாகவே ஈடுபடுவார்கள். ஆனால், அவர்களுடைய விந்தணுக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்காது அல்லது தரமாக இருக்காது. இப்படிப்பட்டவர்களின் மனைவிகளால் கருத்தரிக்க இயலாது. என்றாலும் இந்த வகை ஆண்களை எப்படி ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியும்?

couples | pixabay

ஓரினச் சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஆண்களுக்கு, பெண்கள் மீது எந்த ஈடுபாடும் இருக்காது. ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும். அதற்காக அவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?

ஓரினச் சேர்க்கை

ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட சிலர் தாம்பத்ய உறவின் மீது ஈடுபாடில்லாமல் இருக்கலாம். அந்த ஆண்களைப் பரிசோதித்தால் குழந்தை பெறுவதற்கான தகுதியுடன் இருப்பார்கள்.

ஆன்மிகம்

செக்ஸில் விருப்பமில்லை என்ற ஒரே காரணத்துக்காக, அப்படி உணர்பவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்ற வார்த்தையால் குறிப்பிட வேண்டாம் என்கிறார், மூத்த பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி

Representational Image | Pixabay

மருத்துவரீதியாக `ஆண்’ என்பதற்கான ஏழு அறிகுறிள் உண்டு.

1. ஓர் ஆணுடைய செல்லை பரிசோதித்தால் , குரோமோசோம்களில் 23-வது ஜோடியில் ஒரு X, ஒரு Y இருக்கும். இதை வைத்து அவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இதுதான் முதல் அறிகுறி.

medical | pixabay

2. முகத்தில் மீசை, தாடி, உடலில் மார்பு, அடிவயிறு ஆகிய பகுதிகளில் ரோம வளர்ச்சி இருக்கும். இது இரண்டாவது அறிகுறி. 3. கண்ணுக்குத் தெரிந்த ஆணுறுப்பும் விதைப்பைகளும் இருப்பது மூன்றாவது அறிகுறி.

4, புராஸ்ட்டேட் சுரப்பி, செமினல் வெசிகல் சுரப்பி நான்காவது அறிகுறி.

5. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண் உடம்பிலும் இருக்கும்; பெண் உடம்பிலும் இருக்கும். ஆனால், இது ஆண்களுடைய உடம்பில் அதிகமாக இருக்கும். இதை வைத்தும் சம்பந்தப்பட்டவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இது ஐந்தாவது அறிகுறி.

6. பார்க்கும்போதே ஆணுக்குரிய உடல் வடிவம் தெரிவது ஆறாவது அறிகுறி.

7. ஆண் ஹார்மோன் காரணமாக, ஓர் ஆணின் சிந்தனைகள், வேலை செய்யும் விதம் எல்லாமே 'male brain pattern'-ல் இருக்கும். பெண்ணுக்கு இது வேறு மாதிரி இருக்கும். இது ஏழாவது அறிகுறி. 

இந்த ஏழும் சேரும்போது மருத்துவரீதியாக ஒருவரை ஆண் என்று சொல்ல முடியும். இதை விடுத்து விறைப்புத்தன்மை இருக்கிறதா; தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா; மனைவியை தாயாக்க முடிகிறதா என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

Relationship | Photo: Pixabay

``ஆண் தன் மீது நம்பிக்கைக் கொண்டவனாக இருக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பவன், மனைவிக்கு சம மரியாதை தருபவனாக இருக்க வேண்டும். மீசையை முறுக்குவதெல்லாம் ஆண்மைக்கான அடையாளம் அல்ல. இனிமேல், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்று குறிப்பிடாதீர்கள்" என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.