தாம்பத்ய உறவுக்குப் பிறகான வலி - ஏன், தீர்வு என்ன? |#VisualStory

இ.நிவேதா

தாம்பத்ய உறவை தொடர்ந்து சில பெண்களுக்குப் பிறப்புறுப்பில் வலி, ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

pain | pexels

தாம்பத்ய உறவுகொண்ட அடுத்த நாள் அடி வயிற்றில் மட்டும் வலி ஏற்படுகிறது, ஆனால், ரத்தப்போக்கு இல்லை. இது எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி பல பெண்களுக்கு இருக்கலாம்.

stomach pain | pexels

பெண்களுக்கு, உறவுக்குப் பிறகு அடுத்தநாள் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது, ஆனால், ரத்தப்போக்கு ஏதுமில்லை என்றால், கருப்பையிலோ, சினைப்பையிலோ, பெண்ணுறுப்பின் உள்பகுதியிலோ ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். 

infection | pexels

இதை இடுப்பு அழற்சி நோய் (pelvic inflammatory disease) என்போம். பெண்களுக்கு சிறுநீர்ப்பாதையும், உறவுப்பாதையும் அருகருகே அமைந்திருப்பதால், சிறுநீரில் இருக்கிற கிருமிகள் சுலபமாகப் பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடும். இப்படிச் சென்றிருந்தால், தொற்று ஏற்பட்டு இடுப்பு அழற்சி நோய் உண்டாகும்.

pexels

ஆசன வாயும் பெண்ணுறுப்பும் அருகருகில் அமைந்திருக்கிறது. ஆசன வாயில் கண்ணுக்குத் தெரியாத அளவு கழிவுகள் ஒட்டிக்கொண்டிருந்தாலும், அது பெண்ணுறுப்புக்குள் சென்றால் தொற்றை ஏற்படுத்திவிடும். இதுவும் இடுப்பு அழற்சி நோய்க்கான காரணம்தான். 

infection | pexels

ஆசனவாயிலிருந்து பெண்ணுறுப்புக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், கழிவுகளை வெளியேற்றிய பிறகு, ஆசன வாயை மேலிருந்து கீழ் நோக்கி சுத்தம் செய்ய வேண்டும். கைகளை மேலும், கீழும் நகர்த்தி சுத்தம் செய்யக்கூடாது.

washing | pexels

உறவு நேர்கையில் கணவன், மனைவி இருவரின் பிறப்புறுப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும். உறவு கொள்வதற்கு முன்னால் கட்டாயமாக இருவரும் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்படலாம். 

husband and wife | pexels

இணையில் ஒருவர் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்குமே தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடனே மருத்துவரைச் சந்தித்து,  தொற்றினைக் கண்டறிந்து, சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது. 

Medical Prescription | pixabay