Anal Sex: கவனிக்க வேண்டியவை, செய்யக்கூடாதவை! #VisualStory

இ.நிவேதா

ஒரே நிலையிலான தாம்பத்திய உறவு எல்லா தம்பதியருக்குமே, ஓர் அலுப்பை ஏற்படுத்தும். மாற்றத்துக்காக சிலர் Anal sex என்று சொல்லப்படுகிற ஆசனவாய் வழி உறவு கொள்வார்கள்.

representational image

ஆசனவாய் வழி உறவு கொள்பவர்களும் சரி, உறவு கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களும் சரி `இது சரியா, தவறா? ஆசனவாய் வழி உறவு கொண்டால் கிருமித்தொற்று ஏற்படுமா?’ என்ற கேள்விகளுடன் இருப்பார்கள்.

pixabay

செக்ஸில் இதுவும் ஒரு வகைதான். அதனால், தாராளமாக அப்படிச் செய்யலாம். விருப்பமிருக்கிறவர்கள், ஆணுறை அணிந்து உறவில் ஈடுபட்டால் கிருமித்தொற்று பிரச்னை வராது.

Contraceptives -Representational Image | Image by Hans Braxmeier from Pixabay

ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்கிறவர்கள் பலருக்கும், ஆசனவாய் வழி உறவு கொண்டால், பால்வினை நோய்கள் வராது என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை.

இந்த முறையில் உறவு கொண்டாலும், பால்வினை நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். அதிலும், குறிப்பாக ஹெச்.ஐ.வி வைரஸ் மிகச் சுலபமாகப் பரவும்.

HIV

பெண்ணுறுப்பில் ஆறு வகையான லேயர்கள் இருக்கின்றன. ஆனால், ஆசனவாயில் மிக மெல்லிய ஒரேயொரு லேயர் மட்டுமே இருக்கிறது. இதன் வழியாக ஹெச்.ஐ.வி வைரஸ் மிகச் சுலபமாக உடலுக்குள் சென்றுவிடும்.

பெண்

கணவன், மனைவி ஆசனவாய் வழி உறவு வைத்துக்கொண்டால், எந்தப் பிரச்னையும் வராது. ஒரே பார்ட்னருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும் பிரச்னையில்லை.

ஒருவேளை, கணவன் - மனைவி, லிவ்-இன் தம்பதிகளில் ஒருவருக்கு பால்வினை நோய் இருந்தால், அவர்களும் இந்த நிலை தாம்பத்திய உறவைத் தவிர்ப்பதே நல்லது.

relationship

இன்னொரு முக்கியமான விஷயம், ஆசனவாய் செக்ஸில் ஈடுபட விருப்பமுள்ள தம்பதி, டைஃபாய்டு மற்றும் மஞ்சள்காமாலை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

Vaccine | Photo by Kristine Wook on Unsplash

ஆசனவாய் தசைகள் பெண்ணுறுப்பு தசைகள்போல சுலபமாக விரிந்து சுருங்காது. இறுக்கமாக இருக்கும். அதனால் ஆணுறுப்பை உள்ளே செலுத்தும்போது கடுமையான வலி ஏற்படலாம்.

Pain (Representational Image)

சில நேரங்களில், ஆசனவாய் பகுதி தசை கிழியக்கூடச் செய்யலாம். அதனால், மிக மிக மென்மையான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.

Love | Pixabay

லூப்ரிகேட்டிங் க்ரீமை ஆசனவாயில் அப்ளை செய்த பிறகே உறவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இணை வலிக்கிறது என்று சொன்ன நொடியே நிறுத்திவிட வேண்டும். இல்லையெனில், சில நேரங்களில் தசை கிழிந்து ரத்தம்கூட வரலாம்.