தாம்பத்ய உறவு: எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும்? | #VisualStory

இ.நிவேதா

விருப்பமிருந்தால், மாதவிடாய், கர்ப்ப காலத்திலும், வாழ்நாளின் இறுதி வரையும் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதே நேரம் எப்போது, யாருடன், எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது என்பது பற்றியும் அறிய வேண்டியது அவசியம். 

Menstruation

மைனருக்கு நோ: சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்வது ஒருபக்கம் எனில், இன்னொரு பக்கம் சிறுமியரை `குரூமிங்’ செய்து அவர்கள் சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபடுவது. இரண்டுமே குற்றம்தான். சம்பந்தப்பட்ட பெண்ணே உறவு கொள்ள விருப்பம் தெரிவித்தாலும், அவர் மைனராக இருந்தால் நோ செக்ஸ்.

சிறுமி

திருமணம் தாண்டிய உறவுக்கு நோ: ஒரு திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்த பிறகு, விருப்பப்படி இன்னொரு துணையுடன் வாழலாம். ஆனால், ஒரு திருமண உறவுக்குள் இருக்கும்போதே இன்னோர் உறவில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

Couple | Pixabay

மனைவிக்கு/துணைக்கு உடல்நலம் சரியில்லாதபோது, விருப்பமில்லாதபோது உறவுக்கு வற்புறுத்துதல் தவறு. மாதவிடாயின்போது மற்றும் கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாம் எனச் சொன்னாலும், அதில் மனைவிக்கும் விருப்பமிருக்க வேண்டியது அவசியம்.

Fever

எந்தப் பெண்ணையும் செக்ஸுக்கு வற்புறுத்துவது அல்லது மிரட்டி உறவுகொள்ள வைப்பது கூடவே கூடாது.

Abuse | pixabay

தொற்றுநோய்: ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய கொரோனா, காசநோய் போன்ற தொற்றுநோய் இருக்கையில் செக்ஸை தவிர்ப்பது இருவருக்குமே பாதுகாப்பு.

கொரோனா பசிட்டிவ்

பால்வினை நோய்கள் இருந்தால், துணைக்கு அது குணமான பிறகுதான் தாம்பத்ய உறவுகொள்ள வேண்டும். தனக்கு பால்வினை நோய் இருப்பது தெரிந்த பிறகு, ஒருவர் வாழ்க்கைத்துணையுடனோ, யாருடனுமோ உறவுகொள்வது கூடாது.

Couple | Pixabay

வெளிநாடுகளைப் போல இங்கும் `குரூப் செக்ஸ்', `ஓர் இரவுக்கு மட்டும்' என்று மக்களின் மனப்பான்மை மாறி வருகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.

club | pixabay