சம்மர் சீசன் வந்தாச்சு; கொழுக்குமலைக்கு ஒரு ட்ரிப் போலாமா? | Visual Story

கி.ச.திலீபன்

கொழுக்குமலைக்கு மூணாறு வழியாகவும், தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் வழியாகவும் செல்லலாம். கேரளா வழியாகச் சென்றாலும் கொழுக்குமலை தமிழ்நாட்டைச் சேர்ந்தது.

கொழுக்குமலை

மூணாறு - தேனி சாலையில் பவர் ஹவுஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து பிரியும் சாலை வழியாக சூர்யநெல்லி கிராமத்துக்குச் செல்ல வேண்டும்.

கொழுக்குமலை

சூர்யநெல்லியிலிருந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப் மூலம் கொழுக்கு மலை உச்சிக்குச் செல்லலாம். 6 பேர் வரை செல்லக்கூடிய ஒரு ஜீப்புக்கு 2,000 ரூபாய் வாங்கப்படுகிறது.

கொழுக்குமலை

கொழுக்கு மலை உச்சியிலிருந்து சூரிய உதயத்தைக் காண்பது பேரழகாக இருக்கும் என்பதால் அதிகாலை 04.30 - 05.30 மணிக்கே சூர்யநெல்லியில் இருந்து கிளம்பி விட வேண்டும்.

கொழுக்குமலை

அதிகாலை சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்பதால் ஒரு நாள் முன்னரே சென்று சூர்யநெல்லியில் தங்கி விடலாம். அனைத்துத் தரப்பினருக்குமான விடுதிகளும் அங்குண்டு.

கொழுக்குமலை

கொழுக்குமலை உச்சியில் அமையப்பெற்றிருக்கும் சிங்கப்பாறை பிரசித்தி பெற்றது. அதன் வழியே சூரியனைப் பார்ப்பது பேரழகாய் இருக்கும்.

கொழுக்குமலை

கைக்கெட்டும் தொலைவில் மேகக்கூட்டத்தைப் பார்க்க முடியும். சில வேளைகளில் அப்பனிப்படலம் நம்மை வருடிச்செல்வது பேரனுபவமாய் இருக்கும்.

கொழுக்குமலை

தனியாரால் ஒருங்கிணைக்கப்படும் கேம்பிங்கில் இரவு தங்கி விட்டு அடுத்த நாள் காலை சூரிய உதயத்தைப் பார்த்த பின்னர் திரும்பி வரலாம். அதற்கு நபர் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

கொழுக்குமலை

மூணாறு செல்கிறவர்கள் பயணத்திட்டத்தில் கொழுக்குமலையையும் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுக்குமலை